News March 4, 2025
BREAKING: இந்தியா த்ரில் வெற்றி

CT தொடரின் 1st Semi-Final-லில் இந்தியா த்ரில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸி., அணி 264 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா இலக்கை எட்டி வெற்றி பெற்று, 2023 WC ஃபைனலின் தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது. இந்திய அணியில் அட்டகாசமாக விளையாடிய கிங் கோலி 84 ரன்கள் விளாசி அசத்தினார்.
Similar News
News March 5, 2025
இன்றைய (மார்ச்.05) நல்ல நேரம்

▶மார்ச்- 05 ▶மாசி – 21 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 01:30 PM ▶எமகண்டம்: 07:30 AM – 09:00 AM ▶குளிகை: 10:30 AM- 12:00 PM ▶திதி: சஷ்டி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: சித்திரை ▶நட்சத்திரம் : பரணி.
News March 5, 2025
டிரம்ப் வைத்த செக்.. பணிந்த ஜெலன்ஸ்கி

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா உடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா ஒப்புக்கொண்டால் முதற்கட்டமாக கைதிகளை பரிமாறுவது, வான் வழி, கடல் வழி போரை நிறுத்த தாங்களும் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். அமைதி பேச்சுவார்த்தைக்கு அடம்பிடித்து வந்த ஜெலன்ஸ்கி, உக்ரைனுக்கான ராணுவ நிதியை டிரம்ப் நேற்று நிறுத்தியதும், தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
News March 5, 2025
ஸ்டேஷன் மாஸ்டரை பலி வாங்கிய கூகுள் மேப்!

நாடு முழுவதும் கூகுள் மேப்பால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று மற்றொரு சோகம் நிகழ்ந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான பாரத் பார்தி (43) என்பவர் தனது உறவினர் திருமணத்திற்காக நொய்டாவுக்கு காரில் சென்றுள்ளார். அப்போது கூகுள் மேப் காட்டிய வழியில் சென்ற அவரது கார், நேராக ஒரு கால்வாயில் விழுந்தது. இதில் காருக்குள் தண்ணீர் புகுந்ததில் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.