News October 25, 2025
BREAKING: இந்தியா பவுலிங்

சிட்னியில் நடக்கும் 3-வது ODI-ல் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. தொடரை இழந்துவிட்ட இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்திய அணி: கில்(C), ரோஹித், கோலி, ஷ்ரேயஸ் ஐயர், KL ராகுல், அக்சர் படேல், சுந்தர், பிரசித் கிருஷ்ணா, ராணா, குல்தீப், சிராஜ். இன்று வெற்றி பெறுமா இந்தியா?
Similar News
News October 25, 2025
Sports Roundup: கால்பந்தில் இந்தியா வெற்றி

*ஆசிய யூத் கேம்ஸ் கபடியில், தங்கம் வென்ற ஆடவர், மகளிர் அணியினருக்கு தலா ₹2 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிப்பு. *இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு தேவிகா சிஹாக் முன்னேற்றம். *பிறப்பு சான்றிதழ் மோசடி காரணமாக மல்யுத்த வீரர் சஞ்சீவை இந்திய மல்யுத்த சம்மேளனம் இடைநீக்கம் செய்துள்ளது. * நட்புறவு கால்பந்தில் இந்திய மகளிர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தியது.
News October 25, 2025
விஜய் புதிய முடிவு.. தவெகவினர் மகிழ்ச்சி

கரூர் துயரத்தால் தவெகவின் செயல்பாடுகள் முற்றிலுமாக தேக்கமடைந்துள்ளன. விஜய் மீண்டும் எப்போது களத்திற்கு வருவார் என ஆவலுடன் எதிர்நோக்கும் தவெகவினருக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. நவ., முதல் வாரத்தில் மீண்டும் தேர்தல் பரப்புரையை தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளாராம். வரும் 27-ம் தேதி கரூர் துயரத்தில் பலியான மக்களை சந்தித்த பிறகு கட்சிப் பணிகள் வேகமெடுக்கும் என தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News October 25, 2025
நாவல் பழத்தின் நன்மைகள்

இந்திய ப்ளாக்பெர்ரி என்றும் அழைக்கப்படும் நாவல் பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன. நாவல் பழம் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அதில், 5 சக்திவாய்ந்த ஆரோக்கிய நன்மைகள் என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு தெரிந்த நன்மைகள் ஏதேனும் இருந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.


