News October 29, 2025
BREAKING: IND Vs AUS ஆட்டம் மழையால் ரத்து

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. கான்பெர்ராவில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 5 ஓவர்களில் 43 ரன்கள் எடுத்த போது மழை பெய்தது. போட்டி 18 ஓவர்களாக குறைக்கப்பட, இந்தியா 9.4 ஓவர்களில் 97 ரன்கள் எடுத்திருந்தது. மீண்டும் மழை பெய்திட, வானிலையும் சாதகமாக இல்லாததால் போட்டியை தொடர முடியாது என நடுவர்கள் அறிவித்தனர்.
Similar News
News October 29, 2025
IPL-க்கு மட்டும் முக்கியத்துவம் தரப்படுகிறதா?

உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும், சர்ஃபராஸ்கான் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை என சசிதரூர் சாடியுள்ளார். ரஞ்சி டிராபியில் ரஹானே, பிரித்வி ஷா, கருண் நாயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் பாராட்டியுள்ளார். மேலும், IPL மட்டுமல்லாமல், அனைத்து உள்ளூர் போட்டிகளையும் மதிப்பீடு செய்து வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
News October 29, 2025
லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

ஓராண்டில் மட்டும் ரெப்போ வட்டி விகிதம் 1% வரை குறைந்ததால், கடன் வட்டி விகிதங்களை வங்கிகள் குறைத்து வருகின்றன. குறிப்பாக, அக்டோபரில் பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி, IDBI வங்கி உள்ளிட்டவை கடனுக்கான MCLR விகிதங்களை 0.05% வரை குறைத்துள்ளன. அதனால், அந்த வங்கிகளில் வீடு, வாகன கடன் பெற்றவர்களின் EMI நவம்பர் முதல் குறைகிறது. இது சிறிய தொகை என்றாலும், நீண்ட கால கடன் பெற்றவர்களுக்கு பலனாக அமையும்.
News October 29, 2025
இளைஞர்களின் வாழ்வை வேட்டையாடிய திமுக: நயினார்

நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறையில் ₹888 கோடி மோசடி நடந்துள்ளது திமுக ஆட்சியில் ஊழல் வேரூன்றி இருப்பதை காட்டுவதாக நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார். கடந்த 4.5 ஆண்டுகளில் எத்தனை மோசடிகள் நடந்திருக்குமோ என கேள்வி எழுப்பிய அவர், இளைஞர்களின் எதிர்காலத்தை திமுக சூனியமாக்கி வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், திமுகவின் ஊழல் மோகத்தை அடக்க CBI விசாரணை வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


