News August 29, 2025
BREAKING: ₹2,500ஆக உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் நெல் கொள்முதலுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ₹2,500ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ₹2,500, சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ₹2,545-க்கும் கொள்முதல் செய்யப்படும் என்றும் வரும் செப்.1 முதல் 2026 ஆக. 31 வரை இந்த உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
Similar News
News August 29, 2025
BREAKING: ஒரே நாளில் தங்கம் விலை தலைகீழாக மாறியது

தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2 முறை அதிகரித்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. காலையில் ₹520, பிற்பகலில் ₹520 என ஒரேநாளில் ₹1040 உயர்ந்து சவரன் ₹76,260-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை ₹76,000-ஐ கடப்பது இதுவே முதல்முறை.
News August 29, 2025
GST சீர்திருத்தங்கள் பலன் அளிக்காது: CM ஸ்டாலின்

மாநில வருவாயை பாதுகாக்காமல் GST சீர்திருத்தங்கள் மக்களுக்கு பலன் அளிக்காது என CM ஸ்டாலின் கூறியுள்ளார். GST-ல் சீர்திருத்தங்கள் கொண்டுவருவது தொடர்பாக TN உள்பட பாஜக ஆளாத மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். இதில், சீர்திருத்தத்தின் நோக்கத்தை வரவேற்கும் அதேநேரம், எந்தவொரு குறைப்பும் நலத்திட்டங்களை தக்கவைக்கும் மாநில வருவாயை பாதிக்கக்கூடாது என கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
News August 29, 2025
‘என் குழந்தைக்கு அப்பா அவர் தான்’.. பிரபல நடிகர் சிக்கினார்

மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு நியாயம் சொல்ல வேண்டும் என ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார். சென்னை SP அலுவலகத்தில் பேசிய அவர், முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றதாக கூறி, தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் கூறினார். நேரில் சந்திக்க சென்ற போது தன்னை தாக்கியதாகவும், வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவரே தந்தை எனவும் குறிப்பிட்டுள்ளார்.