News October 14, 2025
BREAKING: பள்ளிகளுக்கு பறந்தது முக்கிய உத்தரவு

RTE சட்டத்தின் கீழ் 25% ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பயிலும் மாணவர்களின் விவரங்களை வழங்குவதற்கான காலக்கெடுவை ஐகோர்ட் நீட்டித்துள்ளது. அக்.31-க்குள் முழு விவரங்களையும் சமர்ப்பிக்க அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக எந்த மாணவர் சேர்க்கையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. விவரங்கள் கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 14, 2025
உங்க வாகனத்துக்கு தவறாக அபராதம் போட்டுருக்கா?

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதை எப்படி ரத்து செய்ய வேண்டும் என தெரியுமா?. அதற்கு நீங்கள் https://echallan.parivahan.gov.in/gsticket/search இணையத்தில் சென்று உங்கள் பெயர், மொபைல் எண், சலான் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, தவறான அபராதம் என்பதற்கான ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும். பின்னர் உங்கள் புகார் சோதனை செய்யப்பட்டு சலான் ரத்து செய்யப்படும். SHARE IT
News October 14, 2025
இளையராஜா அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சலின் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்தினர். பின்பு வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது. CM ஸ்டாலின், விஜய், அஜித் உள்ளிட்ட பல பிரபலங்களின் வீடுகளுக்கு ஏற்கெனவே மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News October 14, 2025
ஆந்திராவில் ₹1.3 லட்சம் கோடியில் AI மையம்

விசாகப்பட்டினத்தில் பிரமாண்ட AI மையம் அமைக்க ஆந்திர அரசுடன் கூகுள் நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 15 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ₹1.3 லட்சம் கோடி) செலவில் அமையவுள்ள ஒரு ஜிகாவாட் திறன் கொண்ட AI மையம் 2029-ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்படவுள்ளது. இது இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என PM மோடி தெரிவித்துள்ளார்.