News August 8, 2024
BREAKING: மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக வரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் எச்சரித்துள்ளது. தரவரிசை பட்டியலுடன் மாணவர்களின் செல்போன் எண்களை சில விஷமிகள் சுயநலத்துக்காக வெளியிட்டுள்ளதாகவும், அவ்வாறு வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளது. அத்துடன், அங்கீகரிக்கப்படாத தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News September 18, 2025
கோவையில் கொடூரக் கொலை: அதிரடி கைது!

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி, யாசகர் ஒருவர் மரக்கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஆர்.எஸ்.புரம் போலீசார், விசாரணை மேற்கொண்டதில், இறந்தவர் சீனிவாசன் என்பதும், மற்றொரு யாசகர் வேல்முருகன், அவரை கொலை செய்துவிட்டு தப்பி சென்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து கோவையில் பதுங்கி இருந்த வேல்முருகனை, நேற்று ஆர்.எஸ்.புரம் போலீசார் கைது செய்தனர்.
News September 18, 2025
தமிழக அரசுக்கு CPM எச்சரிக்கை

தமிழக அரசு, தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் உரிய அக்கறை செலுத்தவில்லை என்றால், அதை எதிர்த்து போராடுவதை தவிர வேறுவழியில்லை என CPM பெ.சண்முகம் எச்சரித்துள்ளார். போக்குவரத்து ஊழியர்கள், தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை குறிப்பிட்ட அவர், எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் கொடுமையான சுரண்டல் ஒப்பந்த முறை தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.
News September 18, 2025
டிராவிட்டை குறிவைக்கும் 3 IPL அணிகள்

கடந்த IPL சீசனில் ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார் ராகுல் டிராவிட் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், வரும் சீசனுக்கு டெல்லி, கொல்கத்தா, லக்னோ அணிகள் ராகுல் டிராவிட் இடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்தான அறிவிப்பு மினி ஏலத்திற்கு முன்னர் வர வாய்ப்புள்ளது.