News July 14, 2024
BREAKING: இந்தியா அபார வெற்றி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 167 ரன்கள் எடுத்தது. 168 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே, அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து 18.3 ஓவரில் 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் முகேஷ் குமார் 4 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இந்த வெற்றி மூலம் இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
Similar News
News November 22, 2025
பொய் கதைகளில் இருந்து தப்புவது கடினம்: ஜக்தீப் தன்கர்

துணை ஜனாதிபதி பதவியை திடீரென ராஜினாமா செய்துவிட்டு, ஜக்தீப் தன்கர் பொதுவெளிக்கு வருவதை பெரும்பாலும் தவிர்த்து வந்தார். தற்போது 4 மாதங்களுக்கு பிறகு, முதல்முறையாக போபாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியுள்ளார். அப்போது, பொய் கதைகள் எனும் சக்கர வியூகத்தில் இருந்து தப்புவது கடினமானது என்று தெரிவித்தார். முன்னதாக, பாஜக அவரை வீட்டுச்சிறையில் வைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின..
News November 22, 2025
ஷூட்டிங்கில் நடிகை ஷ்ரத்தா கபூருக்கு எலும்பு முறிவு

ஈத்தா பட ஷூட்டிங்கின்போது, பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. நாஷிக்கில் நடைபெற்றுவந்த ஷூட்டிங்கின்போது அவருக்கும் காயம் ஏற்பட்டதை அடுத்து, ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. காயம் குணமடைந்த பிறகே மீண்டும் ஷூட்டிங்கை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. பிரபாஸின் சாஹோ படத்தில் நடித்திருந்த ஷ்ரத்தா, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ளார்.
News November 22, 2025
இந்த ஆண்டு மட்டும் 7 படங்கள்: எந்த ஹீரோயினுக்கு தெரியுமா?

இந்த தலைமுறை ஹீரோயின்களுக்கு வாய்ப்பு கிடைப்பதே கடினம். நட்சத்திர நடிகையாக இருந்தாலும் வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களே ரிலீஸ் ஆகும். அப்படியிருக்க இந்த ஆண்டில் 7-வது படத்தின் ரிலீஸுக்கு காத்திருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன். டிராகன், பைசன், தி பெட் டிடெக்டிவ், ஜானகி, கிஷ்கிந்தாபுரி, பரதா என 6 படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வெளிவந்துள்ள நிலையில், 7-வது படமான ‘லாக் டவுன்’ டிச.5-ல் வெளியாகிறது.


