News August 29, 2025
BREAKING: ஆபரணத் தங்கம் விலை பயங்கர மாற்றம்

ஆபரணத் தங்கத்தின் விலை 4-வது நாளாக உயர்ந்து, ₹76 ஆயிரத்தை நெருங்கியதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹520 உயர்ந்து ₹75,760-க்கும், கிராமுக்கு ₹65 உயர்ந்து ₹9,470-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹131-க்கும், கிலோ வெள்ளி ₹1,000 உயர்ந்து ₹1,31,000-க்கும் விற்பனையாகிறது.
Similar News
News August 29, 2025
சற்றுமுன்: அனைத்து பள்ளிகளுக்கும்.. அறிவிப்பு

மாணவர்களிடம் எதிர்மறையாக பேசக்கூடாது என ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. கற்றலில் பின்தங்கி இருக்கும் மாணவர்களையும், வகுப்பில் சேட்டை செய்யும் மாணவர்களையும் அனைவரது முன்னிலையிலும் திட்டக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றலில் முன்னேற்றம் இல்லாதது குறித்து காரணம் கூறுவதை தவிர்த்து, அவர்களை கற்றலில் முன்னேற்ற முனைப்பு காட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News August 29, 2025
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித்ஷா

PM மோடியையும், அவரது மறைந்த தாயாரையும் காங்., தொண்டர்கள் தரக்குறைவாக விமர்சித்ததற்கு, ராகுல் காந்தியிடம் சிறிதளவேனும் மானம் இருந்தால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். PM மோடியின் தாயார் வறுமையில் குழந்தைகளை வளர்த்து, நாட்டிற்கு ஒரு வலிமையான தலைவரை கொடுத்துள்ளதாகவும், அவர்களை இழிவாக பேசியதை யாராலும் சகித்து கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
News August 29, 2025
தீயணைப்பு ஆணையத் தலைவர் சங்கர் ஜிவால்

இன்றுடன் ஓய்வு பெறவுள்ள தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு தமிழக அரசு புதிய பொறுப்பு வழங்கியுள்ளது. தீயணைப்பு ஆணையத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 30 முதல் சட்ட ஒழுங்கு டிஜிபி ஆக பதவி வகித்து வந்தார். இன்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் வழியனுப்பு விழா நடைபெறவுள்ளது. தமிழகத்தின் புதிய டிஜிபி குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.