News September 18, 2025
BREAKING விஜய் கட்சிக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

தேர்தல் பரப்புரைக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அனுமதி விவகாரம் தொடர்பாக தவெக தொடர்ந்த வழக்கை விசாரித்த கோர்ட், சேதமடையும் பொது சொத்துகளுக்கு இழப்பீடு வசூலிக்கும் வகையில் விதிகளை வகுக்கவும் அரசுக்கு ஆணையிட்டுள்ளது. மேலும், கட்சியின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் கடமை அதன் தலைவருக்கே உள்ளதாகவும், அசம்பாவிதங்களுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News April 3, 2026
வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு மசோதாவுக்கு தவெக எதிர்ப்பு

வெளிநாட்டு நிதி பங்களிப்பு மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என தவெக வலியுறுத்தியுள்ளது. சிறுபான்மையினர் நடத்தும் மக்கள் சார்ந்த கல்வி & மருத்துவத் தொண்டு நிறுவனங்களை முடக்கும் நோக்கத்துடன் இந்த மசோதா கொண்டு வரப்பட்டு இருப்பதாக தவெக குற்றஞ்சாட்டியுள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு துடிப்பது ஏன் எனவும் தவெக கேள்வி எழுப்பியுள்ளது.
News April 3, 2026
அப்துல் கலாம் பொன்மொழிகள்

*கடமைகளை வெற்றி, தோல்வி பாராமல் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தாலே புதிய பாதை நமக்காகத் திறந்தே இருக்கும் *வெற்றி என்பது நம் நிழல் போல. வெளிச்சத்தை நோக்கி நடக்கும் போது அது நம் பின்னால் வரும் *திடமான மனதுடன் வாழ்ந்தால் என்றென்றும் வளர்ச்சியடையலாம் *முடியும் வரை முயற்சி செய், உன்னால் முடியும் வரை அல்ல, நீ நினைத்த செயல் முடியும் வரை *சாவி இல்லாத பூட்டு இருக்காது, தீர்வு இல்லாத பிரச்னையும் இருக்காது
News April 3, 2026
வளைகுடா நாடுகளில் தினமும் 20 இந்தியர்கள் உயிரிழப்பு

2021-25 காலக்கட்டத்தில் வெளிநாடுகளில் 37,740 இந்திய ஊழியர்கள் இறந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில், 85%-க்கும் அதிகமானோர் வளைகுடா நாடுகளில் தொழிலாளர்களாக பணிபுரிந்தவர்கள் என்றும், சராசரியாக தினமும் 20 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக மத்திய அரசு கூறியுள்ளது. மேலும், இந்திய தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து தூதரக & சட்ட உதவிகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


