News September 10, 2024
BREAKING: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

+2 தேர்வை தனித்தேர்வராக எழுதியவரும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற உரிமை உள்ளது என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. குடும்ப சூழல் காரணமாக +2வில் தமிழ் வழியில் படித்த சத்யா, குரூப்-2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பித்தார். ஆனால், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20% இடஒதுக்கீட்டில் அவர் பெயரை சேர்க்க மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 18, 2025
அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் சிக்கிய ஆவணங்கள்: ED

அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன் செந்தில் குமார் தொடர்பாக பல ஆவணங்கள் சிக்கியுள்ளதை ED உறுதி செய்துள்ளது. 2002-ல் PMLA-வின் கீழ் பதிவு செய்யப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் சோதனை நடந்தது. இதில், ஏராளமான சொத்துக்கள், முதலீடு, டிஜிட்டல் ஆவணங்கள் சிக்கியுள்ளதாக ED தனது X தளத்தில் பதிவிட்டுள்ளது. இதனால், பொன்முடி, செந்தில் பாலாஜி பாணியில் அவரை கைது செய்யவும் வாய்ப்புள்ளதாம்.
News August 18, 2025
சீக்கிரம் வேலை கிடைக்க இதுல அப்ளை பண்ணுங்க

இளைஞர்கள் LinkedIn, Naukri-ல வேலைக்கு அப்ளை பண்றது வழக்கம். இந்த தளங்கள்ல வேலைக்கு அப்ளை பண்றவங்களோட எண்ணிக்கை அதிகமா இருக்குறதுனால நம்ம Profile shortlist ஆகுறது கடினமான விஷயமா இருக்கு. இதனால LinkedIn-க்கு பதிலா /UPlers.com, /Glassdoor.com தளங்கள்ல வேலைக்கு அப்ளை பண்ணா எளிதில் Profile shortlist ஆகி வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகமா இருக்கு. செக் பண்ணி பாருங்க. SHARE
News August 18, 2025
மாணவர்களிடம் அதிகரிக்கும் நீரிழிவு நோய் பாதிப்பு (1/2)

கோவை PSG மருத்துவக் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆரோக்கியம் சார்ந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. கிராமங்களில் 400 மாணவர்கள் உட்படுத்தப்பட்டதில், 16% பேருக்கு பெரியவர்களுக்கு வரக்கூடிய டைப்-2 நீரிழிவு பாதிப்பு வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாம். நகர்புறங்களில் பீஸ்ஸா, பர்கர் உள்ளிட்ட துரித உணவு கலாசாரத்தை அதிகம் கொண்டுள்ள மாணவர்கள் மத்தியில் பாதிப்பு மேலும் அதிகரிகரிக்கக்கூடுமாம்.