News September 7, 2025
BREAKING: 12 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. அலர்ட்

தென் மாவட்டங்களில் 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. மேலும், 11-ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
Similar News
News September 8, 2025
BREAKING: பாஜகவில் இருந்து Ex MLA சாமிநாதன் விலகினார்

புதுச்சேரி பாஜகவின் முகமாக அறியப்படும் சாமிநாதன், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் 3 முறை மாநில தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்துள்ளார். 2021 தேர்தலில் NR காங்கிரஸ் – BJP கூட்டணி ஆட்சி அமைய முக்கிய காரணமாக இருந்தவர். நியமன MLA பதவியை பறித்த பிறகு கடும் அதிருப்தியில் இருந்த நிலையில், ஊழலற்ற புதிய அரசு அமைய முழு வீச்சில் பாடுபடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
News September 8, 2025
GALLERY: சிலிர்ப்பூட்டும் சந்திர கிரகணத்தின் அழகியல்!

நேற்று நிகழ்ந்த சந்திர கிரகணம் மக்களை சிலிர்ப்பில் ஆழ்த்தியது. சுமார் 82 நிமிடங்கள் நீடித்த இந்த கிரகணத்தின் போது, நிலவு மொத்தமாக ரத்த கலரில் மாறியதை உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர். புகழ்பெற்ற கட்டடங்களின் பின்னணியில் தெரிந்த ‘ஃபிளட் மூன்’ போட்டோக்கள் இணையத்தில் வைரலாகின்றன. அவற்றை பார்க்க, மேலே உள்ள படங்களை Swipe செய்யவும். நீங்க இந்த ஃபிளட் மூனை பார்த்தீங்களா?
News September 8, 2025
கட்சியிலிருந்து நீக்கம்; மல்லை சத்யா ரியாக்ஷன்

மதிமுகவில் இருந்து தன்னை நீக்கி ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார் வைகோ என மல்லை சத்யா சாடியுள்ளார். தன் மீதான இந்த நடவடிக்கை எதிர்பார்த்ததுதான் என கூறிய அவர், இதுபற்றி தான் கவலைப்படவில்லை; வைகோதான் கவலைப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், வைகோ தனது மகன் பற்றி மட்டுமே சிந்திப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.