News August 31, 2025
BREAKING: வெளுத்து வாங்கும் கனமழை

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று(ஆக.31) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று காலையில் 17 மாவட்டங்களுக்கு மழைக்கான அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் நள்ளிரவில் மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டித் தீர்த்ததால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
Similar News
News September 1, 2025
அடுத்த மாதம் Gpay, Phonepe-ல் இது கிடையாது!

அவசர பணத்தேவை இருக்கும்போது, நண்பர்களிடம் போன் பண்ணி கடன் கேட்கத் தயங்குபவர்கள் கூட Gpay, Phonepe-ல் ஈசியாக MONEY REQUEST கொடுத்து வந்தனர். பணம் அனுப்பும் பகுதியில் REQUEST அம்சம் மூலம் இதனை செய்யலாம். UPI பரிவர்த்தனைகளில் இந்த வசதியை அக். 1 முதல் நிறுத்த NPCI முடிவு செய்துள்ளது. பரிவர்த்தனை பாதுகாப்பை வலுப்படுத்தி மோசடிகளை தடுக்கவே இந்த முடிவாம். இனி டிஜிட்டலில் கடன் கேட்க முடியாது. SHARE IT!
News September 1, 2025
நல்ல தூக்கம் வேணுமா? பாயில் படுங்க!

‘பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்’ என்பது மூத்தோரின் நல்வாக்கு. தமிழர்களது பண்பாட்டின் அடையாளமாக திகழும் கோரைப்பாயில் படுப்பதால் *அமைதியான உறக்கம் ஏற்படும். *மூட்டு, தசை சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும். *உடலின் ரத்த ஓட்டம் சீராகும் *மனதிற்கு புத்துணர்ச்சி உண்டாகும். கோரைப்பாயின் மற்றொரு சிறப்பு, கோடை காலத்தில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் இதமான வெப்பத்தையும் அளிக்கும்.
News September 1, 2025
மக்களை ஏமாற்றாதீங்க ஸ்டாலின்: EPS

திமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என EPS வலியுறுத்தியுள்ளார். மதுரையில் பேசிய அவர் அதிமுக ஆட்சியில் ₹ 3.5 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக குறிப்பிட்டார். திமுக ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் நிலைமை பற்றி கேள்வி எழுப்பிய அவர், மக்களை ஏமாற்றாமல் செயல்பாட்டுக்கு வந்த நிறுவனங்களின் விவரத்தை தெரிவிக்க வேண்டும் என்றார்.