News October 22, 2025
BREAKING: கனமழை வெளுக்கும்.. வந்தது ரெட் அலர்ட்

திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இன்று(அக்.22) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 22, 2025
வங்கி கடன்… வந்தது HAPPY NEWS

2017-க்கு பிறகு, கடந்த செப்டம்பரில் நாட்டின் பணவீக்கம் மிகவும் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணிக்கின்றனர். இதனால், வங்கிகள் வழங்கும் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான EMI குறைய வாய்ப்புள்ளது. இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். SHARE IT.
News October 22, 2025
சூப்பர் மாரி.. வாழ்த்திய ரஜினிகாந்த்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடித்து தீபாவளிக்கு வெளியான ‘பைசன்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த், மாரி செல்வராஜுக்கு போன் செய்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ‘படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது’ என்று ரஜினி கூறியதாக மாரி, தனது X பக்கத்தில் நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.
News October 22, 2025
அழுதது நடிப்பா? அன்பில் மகேஸ் விளக்கம்

கரூர் துயரின்போது அன்பில் மகேஸ் அழுதது ட்ரோல் ஆனது. இதற்கு விளக்கமளித்துள்ள அவர், உணர்ச்சிகளும் அறிவும் சார்ந்து சமமான பேச்சுகள் அமைந்திட வேண்டும் என்றார். உணர்ச்சிகள் அதிகமாகி அறிவு குன்றினால் விலங்குக்கு சமம், அறிவு அதிகமாகி உணர்ச்சிகள் குன்றினால் மரத்திற்கு சமம் என வள்ளுவர் கூறியதை எடுத்துரைத்தார். ஒரு கல்லை கடவுளாக மாற்ற தெரிந்த மனிதர், ஒரு மனிதனாக மாற மறந்துவிட்டான் என்றார்.