News October 22, 2025
BREAKING: கனமழை.. அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவு

பருவமழையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள தீவிர பாதிப்புள்ள நோயாளிகள், பிரசவ தேதி நெருங்கும் கர்ப்பிணிகளை ஹாஸ்பிடலில் சேர்க்க அனைத்து மாவட்ட தலைமை ஹாஸ்பிடல்களுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்கவும், தடையற்ற மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜெனரேட்டர்களை பழுதின்றி பராமரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News October 22, 2025
பள்ளி விடுமுறையில்… மாணவர்களுக்கு உத்தரவு

மழைக் காலத்தையொட்டி பள்ளி விடுமுறையில் மாணவர்கள் கவனமாக இருக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, விடுமுறை நாள்களில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதையும், அங்கு குளிப்பதையும் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மாணவர்கள் செல்வதை தவிர்ப்பதற்கு பெற்றோர்களும் HM-களும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE
News October 22, 2025
தீபாவளியில் மக்கள் அதிகம் வாங்கியது இதைதான்!

நடப்பாண்டு தீபாவளி விற்பனை ₹6.05 லட்சம் கோடியாக உள்ளது. இதில் மக்கள் அதிகம் வாங்கிய பொருள்களை தேசிய வணிகர்கள் சங்க கூட்டமைப்பு (CAIT) பட்டியலிட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக மளிகை, உணவுப்பொருள்கள் 12% விற்பனையாகியுள்ளது. அதற்கு அடுத்ததாக, தங்கம் உள்பட நகைகள் 10%, எலக்ட்ரானிக்ஸ் 8%, ஆயத்த ஆடைகள் 7%, ஃபர்னிச்சர் உள்பட வீட்டு உபயோக பொருள்கள் 5%, ஜவுளி 4% விற்பனை செய்யப்பட்டுள்ளது.
News October 22, 2025
உங்க குழந்தைகள் இத சாப்பிடுறாங்களா? உஷார்!

உங்கள் குழந்தைகளுக்கு பேக் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ்களை வாங்கி தரீங்களா? இன்னைக்கே இதை நிறுத்துங்க. பேக் செய்யப்பட்ட/பதப்படுத்தப்பட்ட சிப்ஸ்களால், எடை அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், இளம் வயதிலேயே சுகர் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இந்த சிப்ஸ்களை தயாரிக்கும் எண்ணெயால் இதய பிரச்னைகள் கூட வருவதாக டாக்டர்கள் எச்சரிக்கிறாங்க. SHARE.