News October 5, 2025

BREAKING: மதியத்திற்கு மேல் கனமழை வெளுக்கும்

image

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. இன்று குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், கோவை, நீலகிரி, சிவகங்கை மாவட்டங்களிலும், நாளை கள்ளக்குறிச்சி, தருமபுரி, தி.மலை, விழுப்புரம், காஞ்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என அலர்ட் கொடுத்துள்ளது.

Similar News

News March 17, 2026

ஈரான் தலைவர் ஓர் தன்பாலின ஈர்ப்பாளர்: US உளவுத்துறை

image

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என US உளவுத்துறை நம்புவதாக New York Post தெரிவித்துள்ளது. அவர், தனது சிறுவயதில் ஆசிரியர் ஒருவருடன் உறவில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது. இதுபற்றி டிரம்ப்பிடம் கூறியபோது அவர் சிரித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஈரானில் ஓரினச்சேர்க்கை குற்றம் என இருக்கும் நிலையில், இந்த தகவல் தற்போது சர்வதேச கவனம் பெற்றுள்ளது.

News March 17, 2026

பள்ளியிலேயே மாணவிகள் மது குடிக்கும் காட்சி..EPS வேதனை

image

சென்னையில் திமுக ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் பேசிய EPS, திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியோர் வரை ஒட்டுமொத்த TN மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று குற்றம்சட்டினார். பாலியல் வன்கொடுமை சம்பவங்களை பட்டியலிட்டு சாடிய அவர், பள்ளி மாணவிகள் பள்ளிக்கூடத்தில் மது அருந்தும் காட்சியை பார்க்கையில் வேதனையளிப்பதாக தெரிவித்தார். மேலும், கிட்னி திருட்டு, மணல் கொள்ளையை திமுக அரசு தடுக்கவில்லை என்றார்.

News March 17, 2026

அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும்.. ஹேப்பி நியூஸ்

image

ஜூன் மாதம் வரையிலான ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களை மாநிலங்கள் முன்கூட்டியே எடுத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு உடனடியாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கோதுமை, அரிசி ஏப்.1 வரைக்குமான தேவைப்படும் கையிருப்பு அளவை விட சுமார் 185% அதிகமாக இருக்கிறது. அதிக அளவு தானியங்கள் இருப்பு உள்ளதாலும், அடுத்த சில வாரங்களில் புதிய கோதுமை கொள்முதல் தொடங்கும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!