News October 22, 2025
BREAKING: இன்று மாலை உருவாகிறது.. கனமழை அலர்ட்

வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என IMD கணித்துள்ளது. இது, வட தமிழகம் – தெற்கு ஆந்திரா இடையே கரையை நோக்கி நகரும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புகள் குறைவு எனவும், அதேநேரம் நிலப்பகுதிக்கு அருகே உள்ளதால் கனமழை பெய்யும் எனவும் IMD தெரிவித்துள்ளது.
Similar News
News October 22, 2025
BREAKING: கனமழை வெளுக்கும்.. வந்தது ரெட் அலர்ட்

திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இன்று(அக்.22) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
News October 22, 2025
கேரளாவின் முயற்சியை தமிழகம் முறியடிக்கணும்: TTV

முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீருவோம் என்று கேரள அரசு பிடிவாதம் பிடிப்பதாக TTV தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் கேரளாவின் சில அமைப்புகளும் இதே மனப்பான்மையில் வதந்திகளை பரப்பி வருவதாகவும் கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். எனவே, முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க, தமிழக அரசு சட்ட ரீதியாக முயற்சிகளை மேற்கொண்டு, கேரள அரசின் திட்டங்களை முறியடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
News October 22, 2025
டெல்லியை கலங்கடித்த காற்று மாசு!

தலைநகரில் காற்று மாசு வழக்கமான ஒன்று. ஆனால், தீபாவளியன்று உச்சம் தொட்ட காற்று மாசு, கண்காணிப்பு நிலையங்களையே செயலிழக்க வைத்துள்ளது. 39 நிலையங்களில் வெறும் 9 மட்டுமே தரவுகளை பதிவு செய்துள்ளன, மற்றவை செயலிழந்துள்ளன. மாசு அளவு அதிக அளவை தாண்டும்போது (இந்திய வரம்பு= 60 µg/m³/பதிவானது 1,000 µg/m³), துல்லியமான தரவை பதிவு செய்ய முடியாத தொழில்நுட்ப வரம்பே இதற்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.