News September 5, 2025

BREAKING: கட்சியில் இருந்து விலகுகிறார்..

image

BJP விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று வெளியான <<17613979>>நிர்வாகிகள் பட்டியலில்<<>> தனது பெயர் இடம் பெறாததால், X தளத்தில் கேசவ விநாயகம் உள்ளிட்டோரை கடுமையாக சாடியுள்ளார். அண்ணாமலை போன்ற ஆளுமைக்காகவே கட்சியில் சேர்ந்ததாகவும், தற்போது சிறுபான்மையினரை திட்டமிட்டு நொறுக்குவது வருத்தமளிப்பதாகவும் அதிரடி கருத்தை பதிவிட்டுள்ளார்.

Similar News

News March 10, 2026

அதோட உங்க அரசியல் முடிஞ்சிடும்: அமீர்

image

விஜய்யின் அரசியல் வருகையை அடுத்து அவரை <<19318052>>அமீர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.<<>> இந்நிலையில் கரூர் வழக்கு தொடர்பாக விசாரணைக்காக டெல்லிக்கு வருமாறு CBI சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில், ‘CBI விசாரணைக்கு பயந்து NDA கூட்டணிக்கு போயிராதீங்க; அதோட உங்க அரசியல் முடிஞ்சிடும்’ என விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் வெளியான அமீரின் பதிவு SM-ல் கவனம் பெற்றுள்ளது.

News March 10, 2026

ஒளவையார் பொன்மொழிகள்

image

*ஒருவனிடத்திலே காணப்படும் நல்ல முயற்சிகளுக்கெல்லாம் அப்போது பயன் இல்லையாயினும் பின்னே பலன் உண்டாகும். *காரியங்களைப் பிறர் குறிப்பறிந்து செய்பவரே அறிவுடையவர். *சோம்பலே தீமைக்கும் துன்பத்திற்கும் பிறப்பிடம். *அடக்கமுள்ளவரின் வலிமையை அறியாது அவரை வெல்ல நினைப்பவனுக்குத் தப்பாது கேடு நேரும். *உங்கள் நண்பர்களிடமும் உங்கள் ஏழ்மை நிலையைப் பற்றிப் பேசாதீர்கள்.

News March 10, 2026

ஒரு தொலைபேசியில் PM மோடி போரை நிறுத்தி விடுவார்: UAE

image

வளைகுடா நாடுகளின் மீதான ஈரானின் தாக்குதல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என இந்தியாவுக்கான UAE தூதர் ஹுசைன் ஹர்சன் மிர்சா தெரிவித்துள்ளார். பத்து நாட்களுக்கு முன்பு PM மோடி இஸ்ரேலில் இருந்தார்; ஈரானின் எண்ணெயை அதிகம் வாங்கும் அவர் மிக நல்ல உறவைக் கொண்டுள்ளார் என்றார். இஸ்ரேல் – ஈரான் இடையேயான பிரச்சனையை, ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் PM மோடி தீர்த்து வைத்துவிடுவார் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!