News January 27, 2025

BREAKING: ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

ஆசிரியர், ஆசிரியரல்லாத 47,013 தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 5,418 பணியிடங்களில் பணிபுரிவோர் ஓய்வு பெறும்போது அவை ஒழிவடையும் (Vanishing post) பணியிடங்களாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், 145 பணியிடங்களுக்கு டிச.31, 2028 வரை நீட்டிப்பும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News August 29, 2025

விஸ்வநாதன் ஆனந்த் கொடுத்த அட்வைஸ்.. மறக்காத குகேஷ்

image

ஓவர் கான்ஃபிடன்ஸால் முதல் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் தோற்றதாக குகேஷ் தெரிவித்துள்ளார். பின்னர் விஸ்வநாதன் ஆனந்த், தானும் தனது முதல் உலக சாம்பியன்ஷிப்பில் தோற்றதாகவும், பிறகு கம்பேக் கொடுக்க தனக்கு 11 போட்டிகள் இருந்த நிலையில், உனக்கு தற்போது 13 போட்டிகள் உள்ளது என அட்வைஸ் கொடுத்ததாகவும் குகேஷ் நினைவுகூர்ந்துள்ளார். இந்த அட்வைஸ் தான் சாம்பியன்ஷிப் அடிக்க தனக்கு உதவியதாகவும் தெரிவித்துள்ளார்.

News August 29, 2025

சற்றுமுன்: ₹2,500ஆக உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

image

தமிழகத்தில் நெல் கொள்முதலுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ₹2,500ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ₹2,500, சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ₹2,545-க்கும் கொள்முதல் செய்யப்படும் என்றும் வரும் செப்.1 முதல் 2026 ஆக. 31 வரை இந்த உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

News August 29, 2025

இனி முத்தக்காட்சிகளில் நடிக்க மாட்டேன்: விஷால்

image

நடிகை சாய் தன்ஷிகாவுடன் இன்று நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இனி முத்தக்காட்சிகளில் நடிக்க மாட்டேன் என விஷால் தெரிவித்துள்ளார். இத்தனை ஆண்டுகள் வாழ்ந்த பேச்சுலர் வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், கடவுள் தனக்கு அனுப்பிய தேவதை தன்ஷிகா என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மேலும், பேச்சுலர்களாக இருக்கும் சிம்பு, அதர்வா, ஜெய், திரிஷாவுக்கு நல்ல நேரம் அமைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!