News August 25, 2025

நாளை பள்ளி மாணவர்களுக்கு.. முக்கிய அறிவிப்பு

image

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதி மறுகூட்டல் (Re-total), மறு மதிப்பீடு (Revaluation) கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் வெளியாகியுள்ளது. மார்க்கில் மாற்றம் இருக்கும் தேர்வர்களின் பட்டியல் நாளை(ஆக.26) பிற்பகலில் வெளியாகவுள்ளது. மாற்றம் இல்லாதவர்களின் பதிவெண்கள் பட்டியலில் இடம்பெறாதாம். www.dge.tn.gov.in இணையதளத்தில் Notification பகுதியில் புதிய மார்க்கை அறியலாம். All the best மாணவர்களே

Similar News

News August 26, 2025

டிரெண்டிங்கில் யூரி ககாரின்…. யார் இவர் ?

image

அனுமன் பற்றிய <<17507921>>அனுராக் தாக்கூரின்<<>> பேச்சால் X தளத்தில் யூரி ககாரின் பெயர் டாப் டிரெண்டிங்கில் உள்ளது. விண்வெளிக்கு முதலில் சென்றவர் சோவியத் யூனியனின் யூரி ககாரின் தான். அவர் ஏப்ரல் 12, 1961ஆம் ஆண்டு வோஸ்டாக் 1 விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றார். தொடர்ந்து வோஸ்டாக் 1 விண்கலம் மணிக்கு 27,000 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை ஒரு முறை சுற்றியது. இந்த விண்வெளி பயணம் 108 நிமிடங்கள் நீடித்தது.

News August 26, 2025

மோடி சிறைக்கு சென்றால்.. அமித்ஷா சொல்வது இதுதான்!

image

பதவி பறிப்பு மசோதா குறித்து பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, PM மோடி சிறைக்கு சென்றால் அவரும் கூட பதவியை இழப்பார் எனத் தெரிவித்துள்ளார். மோடி அவருக்கு எதிராகவே ஒரு அரசியல் சாசன திருத்தத்தை கொண்டு வந்து இருப்பதாக குறிப்பிட்ட அவர், முதல்வரோ, பிரதமரோ அல்லது எந்தவொரு தலைவரோ சிறையில் இருந்தவாறு நாட்டை வழிநடத்த முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

News August 26, 2025

ராசி பலன்கள் (26.08.2025)

image

➤ மேஷம் – ஆதாயம் ➤ ரிஷபம் – ஆதரவு ➤ மிதுனம் – தோல்வி ➤ கடகம் – போட்டி ➤ சிம்மம் – லாபம் ➤ கன்னி – பெருமை ➤ துலாம் – பயம் ➤ விருச்சிகம் – நற்சொல் ➤ தனுசு – மகிழ்ச்சி ➤ மகரம் – கீர்த்தி ➤ கும்பம் – சோதனை ➤ மீனம் – வாழ்வு.

error: Content is protected !!