News April 21, 2024

BREAKING: குஜராத் அணி வெற்றி

image

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. குஜராத் அணியின் சாய் கிஷோர் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து, 143 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணி, 19.1 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

Similar News

News January 1, 2026

புதுச்சேரி: லாரி டயரில் சிக்கிய மாணவி

image

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கவி நர்சிங் படித்து வருகிறார். இவர் தனது தோழி தீபிகா என்பவரை அழைத்துக் கொண்டு உறவினர் சரண் என்பருடன் காரைக்கால் கடற்கரைக்கு மோட்டார் சைக்கிளில் நேற்று வந்துள்ளார். இதனை அடுத்து மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பி உள்ளனர். அப்பொழுது மதகடி அருகே சென்ற பொழுது, பின்புறம் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், சங்கவி லாரியின் டயரில் சிக்கி பலியானார்.

News January 1, 2026

தமிழகத்தில் பொங்கல் பரிசு.. அரசு முக்கிய அறிவிப்பு

image

தமிழகத்தில் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், மக்களுக்கு அரசியல் கட்சியினர் டோக்கன் விநியோகம் செய்யக் கூடாது என கூட்டுறவுத் துறை எச்சரித்துள்ளது. எக்காரணத்தை கொண்டும் ரேஷன் கடைகளை சாராத நபர்கள் பொங்கல் பரிசு டோக்கனை வழங்கக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, பொங்கல் பரிசுத் தொகை எவ்வளவு என CM ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது.

News January 1, 2026

2026-ல் களமிறங்கும் எலக்ட்ரிக் கார்கள்

image

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. 2025-ல் அதிக கார்களை விற்ற மாருதி நிறுவனம், முதல்முறையாக எலக்ட்ரிக் காரை சந்தையில் இறக்குகிறது. இதனால், எலக்ட்ரிக் கார் சந்தை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல 2026-ல் சந்தைக்கு வரவுள்ள கார்களை பார்க்க, மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் பண்ணுங்க.

error: Content is protected !!