News October 22, 2025
BREAKING: குரூப் 4 தேர்வு முடிவு வெளியானது

ஜூலை 12-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 4,662 பணியிடங்களுக்கு TNPSC நடத்திய தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் இத்தேர்வை எழுதியிருந்தனர். TNPSC இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். SHARE IT.
Similar News
News January 14, 2026
ஆண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள்

ஆண்களிடம் எப்போதும் கேட்கக் கூடாத கேள்விகள்: *இத்தன வருசமா வெளியூர்ல இருந்தும், இவ்வளவு தான் சம்பாதிச்சியா? *திருமணத்தை தள்ளி வைக்கும் ஆணிடம், ‘முடி கொட்டிருச்சு. இன்னும் கல்யாணம் ஆகலையா?’ *வேலை தேடும் ஆணிடம், ‘நீ எப்போ வேலைக்கு போவ?’ *இன்னும் சொந்த வீடு வாங்கலையா? *கல்யாணம் ஆகி இன்னும் குழந்தை இல்லையா? வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால், கமெண்ட்டில் ஷேர் பண்ணுங்க.
News January 14, 2026
பிரபல நடிகர் காலமானார்.. அடுத்தடுத்து துயரம்

தொண்டை புற்றுநோயால் போராடி வந்த பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க்ஸ் கில்பர்ட் (67) காலமானார். இவரது 2 மகன்களே இறுதிக் காலம் வரை கவனித்து வந்துள்ளனர். முன்னதாக, தனது 12 வயதில் தந்தையை இழந்த கில்பர்ட், வாழ்க்கை துணையாக இருந்த தனது மனைவியையும் 2020-ல் இழந்து பெரும் துயரை சந்தித்தார். மார்க்ஸ் மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினரும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News January 14, 2026
Refund Scam: ₹5 கோடி சம்பாதித்த கில்லாடி

சீனாவில் 17வயது இளைஞர், இ-காமர்ஸ் தளங்களின் ரீ-பண்ட் முறையில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி பெரியளவில் மோசடி செய்துள்ளார். வாங்கிய பொருள்களை திருப்பி அனுப்பாமலேயே, அனுப்பியது போல் ஏமாற்றி, ரீ-பண்ட் பெற்றதுடன் அந்த பொருள்களை மறுவிற்பனை செய்து ₹5 கோடி சம்பாதித்தார். இதையடுத்து, ஒரு நிறுவனம் அளித்த புகாரில் மோசடி அம்பலமாக, நீதிமன்றம் சிறார் என்றும் பாராமல் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.


