News September 24, 2025
BREAKING: தீபாவளி போனஸ் அறிவித்தது அரசு

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள்கள் சம்பளத்தை தீபாவளி போனஸாக வழங்க PM மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 10 லட்சத்து 90 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் இதனால் பயன்பெறுவர். தீபாவளி போனஸ் வழங்க ₹1,865 கோடி அரசுக்கு கூடுதலாக செலவாகும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 24, 2025
எலான் மஸ்க் தந்தை மீது பாலியல் குற்றச்சாட்டு

எலான் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க், தனது 5 குழந்தைகள் மற்றும் வளர்ப்பு குழந்தைகளை 1993 முதல் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. தனது உள்ளாடைகளை தவறான எண்ணத்தில் கையாண்டதாக வளர்ப்பு மகள் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், இது பொய்யான குற்றச்சாட்டு என்று எரோல் மஸ்க் மறுத்துள்ளார். இதை வைத்து தன்னை மிரட்டி சில குடும்ப உறுப்பினர்கள் பணம் பறிக்க முயல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
News September 24, 2025
ஆசிய கோப்பை: இந்தியா பேட்டிங்

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான மோதலில், டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. சூப்பர் 4 சுற்றில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஏறக்குறைய இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும். பலம் வாய்ந்த இந்தியாவை வங்கதேசம் வீழ்த்துவது கடினமான காரியமே. Head to Head = 17 போட்டிகள், வெற்றி = 16 இந்தியா, 1 வங்கதேசம்.
News September 24, 2025
TTV-யை சந்திக்கவில்லை என செங்கோட்டையன் மறுப்பு

TTV தினகரனை, கே.ஏ.செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். தனியார் TV-க்கு தொலைபேசி வாயிலாக பேசிய அவர், சொந்த வேலையாக சென்னை வந்ததாகவும், தான் யாரையும் சந்திக்கவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார். அதேநேரம், அதிமுக ஒன்றிணைய வேண்டும் எனவும், இணைந்து 2026 தேர்தலை சந்தித்தால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்லலாம் என்பது தனது விருப்பம் எனவும் கூறியுள்ளார்.