News October 15, 2025
நவம்பர் மாத ரேஷன் அரிசியை இம்மாதமே வாங்கலாம்

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் நவம்பர் மாதத்திற்கான ரேஷன் அரிசியை மட்டும் இம்மாதமே பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். அக்டோபர் மாத ஒதுக்கீடான 12 – 35 கிலோ அரிசியை ஏற்கெனவே பெற்றவர்களும் ரேஷன் கடைகளில் இம்மாதமே அடுத்த மாதத்திற்கான அரிசியை பெற்று கொள்ளலாம். வடகிழக்கு பருவமழை காலத்தில், மழை அதிகம் பெய்யலாம் என்பதை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News January 17, 2026
மகளிர் உரிமைத் தொகை உயர்வு.. HAPPY NEWS

மகளிருக்கு பொங்கலுக்குள் மகிழ்ச்சியான செய்தி என அமைச்சர் கூறியதிலிருந்தே, எப்போது உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால், இதுவரை அரசு அறிவிப்பை வெளியிடவில்லை. இதனிடையே, மகளிருக்கு ₹2,000 வழங்கப்படும் என அதிமுக தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டது. இதனால் உரிமை தொகையை உயர்த்துவது குறித்த அறிவிப்பை வெளியிட திமுக அரசு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
News January 17, 2026
காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகை எங்கே? பாஜக

மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை என CM ஸ்டாலின் அறிவித்த நிலையில், பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதே திமுகவின் வழக்கம் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு மாதம் ₹1000 வழங்கப்படும் என திமுக கொடுத்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை எனவும் அவர் சாடியுள்ளார். 5 ஆண்டுகளில் அவர்களுக்கு வழங்க வேண்டிய ₹60,000 எப்போது வருமென தெரியவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.
News January 17, 2026
விஜய் கட்சியில் இணைந்த அடுத்த அதிமுக தலைவர்

அதிமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட EX MLA புரசை V.S.பாபு தவெகவில் இணைந்துள்ளார். 2008 காலக்கட்டத்தில் திமுக மா.செ.வான புரசை வி.எஸ்.பாபு, அதிமுக மா.செ.வாக இருந்த சேகர்பாபுவை எதிர்த்து அரசியல் செய்தவர். 2011-ல் சேகர்பாபு திமுகவில் இணைந்ததால், வி.எஸ்.பாபு அதிமுகவுக்கு தாவினார். தற்போது மா.செ பதவி பறிக்கப்பட்டதால், செங்கோட்டையனுக்கு ஆதரவாக தவெகவில் ஐக்கியமாகி இருக்கிறார்.


