News May 18, 2024
BREAKING: தங்கம், வெள்ளி விலை உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹640 உயர்ந்து ₹54,800க்கும், கிராமுக்கு ₹80 உயர்ந்து ₹6,850க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை இதுவரை இல்லாத அளவிற்கு கிராமுக்கு ₹4 உயர்ந்து ₹96.50க்கும், கிலோவிற்கு ₹4000 உயர்ந்து ₹96,500க்கும் விற்பனையாகிறது.
Similar News
News March 7, 2026
Sports 360°: சஞ்சு சாம்சனுக்கு இந்த விருது கிடைக்குமா?

➤T20 WC Finals-ல் நாளை நியூசியை எதிர்கொள்கிறது இந்தியா ➤T20 WC அரையிறுதியில் அபாரமாக விளையாடிய சஞ்சு சாம்சன், Player of the Tournament விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் ➤La Liga கால்பந்து தொடரில் செல்டா விகோ அணிக்கு எதிரான போட்டியில், ரியல் மாட்ரிட் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது ➤பிராக் மாஸ்டர்ஸ் தொடரில் வெற்றி பெற்ற குகேஷ் FIDE தரவரிசையில் Top 10-ல் இடம்பிடித்துள்ளார்.
News March 7, 2026
எடப்பாடியாரே எச்சரிக்கையாக இருங்க: திருமாவளவன்

பிஹாரில் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட நிலை தமிழ்நாட்டிலும் ஏற்படும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். EPS முதலமைச்சராக வந்தால், அவரால் அந்த பதவியில் அமர முடியுமா என்றும், நிதிஷ்குமாரின் கதி EPS-க்கு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எடப்பாடியாரே எச்சரிக்கையாக இருங்கள்; MGR, ஜெ., கட்டிக் காத்த அதிமுகவை காப்பாற்றுங்கள் எனவும் கூறியுள்ளார்.
News March 7, 2026
மார்ச் 15-ல் தேர்தல் தேதி?

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி வரும் 15 அல்லது 16-ம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் தனது ஆய்வு பணிகளை தேர்தல் ஆணையர்கள் இன்று முடிக்கிறார்கள். நாளை முதல் 3 நாள்களுக்கு மேற்குவங்கத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் 5-7 கட்டங்களாகவும், மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


