News October 29, 2025
BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

22 கேரட் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ₹3,000 குறைந்து சற்று நிம்மதி அளித்த நிலையில், இன்று ₹2,000 அதிகரித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. காலையில் ₹1,080 உயர்ந்த நிலையில், மாலையில் மேலும் ₹920 அதிகரித்துள்ளது. தற்போது, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் ₹11,325-க்கும், 1 சவரன் ₹90,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Similar News
News October 29, 2025
இந்த Skin/Hair Care-லாம் பண்றீங்களா? சுத்த WASTE!

நல்லா முடி வளரணும், முகம் பளபளன்னு இருக்கணும் என எண்ணி வீட்டிலேயே பல Home remedy-களை பண்றீங்களா? இதெல்லாம் எவ்வளோ பண்ணாலும், எந்த ரிசல்ட்டும் கிடைச்சிருக்காதே. நீங்கள் நம்பி தினமும் செய்யும் Home remedy-கள் உண்மையிலேயே பயனுள்ளதா இல்லையா என டாக்டர்கள் ரேட்டிங் கொடுத்துள்ளனர். அதனை தெரிந்துகொள்ள மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்யுங்கள். விழிப்புணர்வுக்காக அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 29, 2025
பிரபாஸுக்கு வில்லனாகிறாரா டான் லீ? அப்டேட்

சந்தீப் வங்கா ரெட்டி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ படத்தில் தென் கொரிய நடிகர் டான் லீ நடிக்க உள்ளதாக கடந்த சில நாள்களாகவே தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், கொரிய ஊடகம் ஒன்றும் அதை உறுதி செய்துள்ளது. ‘ஸ்பிரிட்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக டான் லீ நடிப்பதாகவும், இதன் மூலம் அவர் இந்திய சினிமாவில் அறிமுகமாக உள்ளதாகவும் கொரிய ஊடகம் தெரிவித்துள்ளது.
News October 29, 2025
ஆவி பறக்கும் இட்லி வகைகள்

ஆவி பறக்கும் இட்லியை, சுடச்சுட எடுத்து வாயில் வைத்து மெல்லுவது ஒரு தனி சுகம். தென்னிந்திய பாரம்பரிய உணவுகளில், இட்லி முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக தமிழகத்தில். அரிசி–உளுந்து மூலம், இட்லி சுவை மற்றும் ஆரோக்கியத்தை தருகிறது. இட்லியில் பல வகைகள் உள்ளன. அவை என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு பிடித்த இட்லி எது? கமெண்ட்ல சொல்லுங்க.


