News October 8, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

ஆபரணத் தங்கத்தின் விலை ₹90 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹800 உயர்ந்து ₹90,400-க்கும், கிராமுக்கு ₹100 உயர்ந்து ₹11,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுவதுபோல், விரைவில் தங்கம் விலை ₹1 லட்சத்தை எட்டிவிடும் என தெரிகிறது.
Similar News
News October 8, 2025
யார் இந்த தஷ்வந்த்?

சென்னையில் 2017-ல் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்டார். தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கில் தஷ்வந்த் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளிவந்த அவர், தனது அம்மாவையும் கொலை செய்தார். இந்த இரு வழக்குகளிலும் 46 வருடம் சிறை, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையே அம்மா கொலை வழக்கில், அவரின் அப்பா பிறழ்சாட்சியாக மாறியதால், அந்த வழக்கில் இருந்து <<17946346>>தஷ்வந்த்<<>> விடுவிக்கப்பட்டார்.
News October 8, 2025
தவெகவுக்கு போட்டியாக திமுக கையில் எடுக்கும் வியூகம்

தவெகவை விட அதிக இளைஞர்களை சேர்க்கணும் எனும் முனைப்பில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக, 3 லட்சம் இளைஞர்கள் பட்டாளத்தோடு இளைஞரணி மாநில மாநாடு இம்மாதம் கோவையில் நடக்கவுள்ளதாம். புதிய உறுப்பினர்களை சேர்க்கும் அசைன்மென்ட் நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. கட்டமைப்புக்கு உட்படும் இளைஞர்களை தேர்வு செய்து மக்கள் பாதிக்காத வகையில் மாநாட்டை நடத்தவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
News October 8, 2025
அடுத்த வழக்கை தொடர்ந்த தவெக

கரூர் விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை சென்னை HC அமைத்திருந்தது. வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க் தலைமையிலான குழு அக்.5-ம் தேதி விசாரணையை தொடங்கியது. இந்நிலையில், இந்த விசாரணை குழுவுக்கு தடை கோரி SC-யில் தவெக மேல்முறையீடு செய்துள்ளது. தங்களுடைய கருத்தை கேட்காமல் குழுவை அமைத்ததாகவும், SIT குழு பாரபட்சமாக விசாரணை நடத்தும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.