News August 7, 2025
BREAKING: தங்கம் விலை புதிய உச்சம் தொட்டது

சென்னையில் தங்கம் விலை இன்று(ஆக.7) சவரனுக்கு ₹160 உயர்ந்துள்ளது. இதனால், வரலாறு காணாத புதிய உச்சமாக 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,400-க்கும், சவரன் ₹75,200-க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹127-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை உயர்வு குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News August 10, 2025
ஆயுத உற்பத்தியில் புதிய சாதனை

இந்தியாவின் பாதுகாப்பு தளவாடங்களின் உற்பத்தி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 2024-25-ம் ஆண்டில் ₹1.50 லட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு ₹1.27 லட்சம் கோடியாக இருந்த நிலையில், தற்போது 18% அதிகரித்துள்ளது. இதில் பொதுத்துறை நிறுவனங்கள் 77%, தனியார் நிறுவனங்கள் 23% பங்களிப்பை செய்துள்ளன.
News August 10, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News August 10, 2025
தம்பதியரே, கொஞ்சம் நெருக்கமாகவும் இருங்கள்

நீண்டகாலம் பாலியல் செயல்பாடுகளில் இருந்து விலகி இருப்பது உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என புளோ ஹெல்த் நிறுவனம் நடத்திய ஆய்வு எச்சரிக்கிறது. தம்பதியரிடையே உடல் உறவு இல்லாததால் நோயெதிர்ப்பு சக்தி பலவீனம் அடையும், பெண்களுக்கு பிறப்புறுப்பின் ஆரோக்கியம் குறையும், மாதவிடாய் காலத்தில் அதிக பிரச்சினைகள் ஏற்படும், ஆண்களுக்கு இதய நோய்களின் ஆபத்து அதிகரிக்கும் என்றெல்லாம் ஆய்வு முடிவு கூறுகிறது.