News October 17, 2025
BREAKING: தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2,400 உயர்ந்தது

தங்கம் விலை இன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராமுக்கு ₹300 உயர்ந்து ₹12,200-க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹2,400 அதிகரித்து சவரன் ₹97,600-க்கு விற்பனையாகிறது. தங்கத்தை பொறுத்தவரையில் இம்மாதத்தில் மட்டும் சவரனுக்கு ₹10,480(அக்.1 – அக்.17) அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 17, 2025
பேரவையிலேயே எதிரொலித்த பாமக பஞ்சாயத்து

சட்டப்பேரவையில் இருமல் சிரப் விவகாரத்தில் பாமக MLA அருளை பேச அனுமதித்ததற்கு, அன்புமணி தரப்பு MLA-க்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். இதனால் அவையின் மாண்பு கெடுவதாக கூறிய சபாநாயகர், பாமக பஞ்சாயத்துகளை பேரவைக்கு வெளியே வைத்துக்கொள்ளும்படி கூறினார். மேலும், இருமல் சிரப் விவகாரத்தில் முதலில் கடிதம் போட்டது MLA அருள்தான் என சபாநாயகர் அப்பாவு கூறினார்.
News October 17, 2025
சற்றுமுன்: விமான கட்டணம் ₹11,000 வரை உயர்ந்தது

தீபாவளி பண்டிகைக்கு பலரும் சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கியுள்ள நிலையில், விமானக் கட்டணம் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு சாதாரண நாள்களில் ₹3,129 ஆக இருக்கும் கட்டணம் தற்போது ₹15,683 வரை உயர்ந்துள்ளது. அதேபோல், திருச்சிக்கு ₹15,233, கோவைக்கு ₹17,158, தூத்துக்குடிக்கு ₹17,055 என உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News October 17, 2025
தமிழ் தாய் ஈன்றெடுத்த பிள்ளை கன்னடம்: வைரமுத்து

‘தமிழ்’ என்கிற தாய், தனது வயிற்றிலிருந்து கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு ஆகிய பிள்ளைகளை ஈன்றெடுத்து, செம்மொழி என்ற தகுதியை பெற்றது என்று வைரமுத்து கூறியுள்ளார். தாய்மொழி என்பது கண்கள் என்றும், பிற மொழிகள் கண் கண்ணாடி போன்றவை எனவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில், ‘தக் லைஃப்’ பட புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், ‘தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்’ என கூறியதற்கு எதிர்ப்புகள் கிளம்பின.