News October 15, 2025
BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹280 உயர்ந்து ₹94,880-க்கும், கிராமுக்கு ₹35 உயர்ந்து ₹11,860-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ₹1,960, இன்று ₹280 என 2 நாள்களில் ₹2240 உயர்ந்துள்ளது. விலையை குறைக்கும் நடவடிக்கையாக, தங்கத்திற்கான இறக்குமதி & GST வரியை குறைக்க வேண்டும் என நகை பிரியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Similar News
News October 15, 2025
இரவோடு இரவாக உடற்கூராய்வு: CM விளக்கம்

கரூர் துயரில் 13 ஆண்கள், 18 பெண்கள், 10 குழந்தைகள் என 41 பேர் உயிரிழந்த விவரத்தை ஸ்டாலின் பேரவையில் தெரிவித்தார். உயிரிழந்தோரின் அனைத்து உடல்களையும் கரூர் அரசு ஹாஸ்பிடலின் பிணவறையில் வைக்க போதிய குளிர்சாதன வசதி இல்லாததால், கலெக்டரின் சிறப்பு அனுமதி பெற்று அன்று இரவே உடற்கூராய்வு செய்யப்பட்டது என்றார். செப்.28, மதியம் 1:10 மணியளவில் 39 உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட்டன என்றும் தெரிவித்தார்.
News October 15, 2025
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தவெகவினர் தாக்கினர்: CM

கரூர் துயர சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு, எதிர்க்கட்சி தலைவர் (EPS) வேலுசாமிபுரத்தில் நடத்திய கூட்டத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என ஸ்டாலின் கூறியுள்ளார். பேரவை கூட்டத்தொடரில் கரூர் விவகாரம் பற்றி விளக்கமளித்த அவர், கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றத் தான் ஆம்புலன்ஸ் வந்ததாக தெரிவித்தார். ஆனால், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தவெக நிர்வாகிகள் தாக்கியதாக குற்றஞ்சாட்டினார்.
News October 15, 2025
முதல்வர், ஏடிஜிபி தகவலில் முரண்: இபிஎஸ்

கரூர் சம்பவத்தில் பாதுகாப்பு தொடர்பாக CM மற்றும் ஏடிஜிபி அளித்த தகவல்களில் முரண்பாடு உள்ளதாக EPS விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், 600 போலீசார் பாதுகாப்பில் இருந்ததாக CM கூறுவதாகவும் ஆனால் ஏடிஜிபியோ 500 போலீசார் என குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார். TVK கேட்ட இடத்தை அளித்திருந்தால், கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.