News October 9, 2025
BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

தங்கம் விலையில் ஒரு நாளைக்கு 2 முறை மாற்றம் ஏற்படுவது தற்போது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் காலையில் ஆபரணத் தங்கம் 1 சவரன் ₹120 அதிகரித்த நிலையில், மதியம் மேலும் ₹200 உயர்ந்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இன்று ₹320 அதிகரித்ததை அடுத்து, விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தற்போது, 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹11,425-க்கும், 1 சவரன் ₹91,400-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Similar News
News October 9, 2025
தினமும் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

தினமும் பழங்கள் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். ஒவ்வொரு பழத்திலும், பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளன. என்னென்ன பழங்களில் என்ன நன்மைகள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாமல் வேறு ஏதேனும், சத்து நிறைந்த பழம், உங்களுக்கு தெரிந்தா கமெண்ட்ல சொல்லுங்க.
News October 9, 2025
கைரேகை மூலம் UPI.. எப்படி செய்வது?

இனிமேல் UPI கட்டணங்களை PIN உள்ளீடு இல்லாமல், கைரேகை (Fingerprint) (அ) முக அடையாளம் (Face ID) மூலம் மட்டுமே பணம் செலுத்தும்முறை படிப்படியாக அமலுக்கு வரும். இதற்கு, முதலில், UPI செயலியை (PhonePe, GPay, Paytm) அப்டேட் செய்யவும். செயலியின் Settings-ல் சென்று பயோமெட்ரிக் அங்கீகாரம் (Biometric Authentication) அம்சத்தை இயக்கவும். பின்னர், அதை உங்கள் ஸ்மார்ட்போனின் பயோமெட்ரிக் உடன் இணைக்கவும். SHARE IT.
News October 9, 2025
AP ஃபார்முலாவில் கூட்டணி ஆட்சி: கார்த்தி சிதம்பரம்

ஆட்சியில் காங்., பங்கு கேட்பதில் தவறில்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகார லட்சியம் இல்லாவிட்டால், காங்., ஏன் அரசியல் கட்சியாக இருக்க வேண்டும் என கேள்வியெழுப்பினார். AP-யில் சந்திரபாபுவுக்கு மெஜாரிட்டி இருந்தும், கூட்டணி ஆட்சி நடத்துகிறார், ஆனால் 2006-ல் திமுக மைனாரிட்டி ஆட்சி நடத்தியும், காங்கிரஸுக்கு பங்கு தரவில்லை என்றார். அவரது கருத்து பற்றி என்ன நினைக்கிறீங்க?