News September 16, 2025
BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

ஆபரணத் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராம் ₹70 உயர்ந்து ₹10,280-க்கும், சவரன் ₹560 உயர்ந்து ₹82,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ₹82,000-ஐ கடந்தது இதுவே முதல்முறை. இதனால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Similar News
News September 16, 2025
வங்கியில் வேலை, தேர்வு கிடையாது; அப்ளை பண்ணுங்க

SBI வங்கியில் சிறப்பு அதிகாரி, மேலாளர் பதவிகளுக்கு 156 காலி பணியிடங்கள் உள்ளது. இதற்கு மாத சம்பளமாக ₹85,920-₹1,05,280 வரை வழங்கப்படும். Specialist Officer பதவிக்கு எழுத்து தேர்வு கிடையாது. மேலாளர் பதவிக்கு 28-35 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். MBA(Finance), MMS(Finance),CA, CFA முடித்தவர்கள் அக்.2-க்குள் https://sbi.co.in/web/careers/current-openings – ல் விண்ணப்பியுங்கள்.
News September 16, 2025
ஒற்றுமை என்ற பெயரில் புதிய கோஷம்: ஆர்.பி.உதயகுமார்

ஒற்றுமை என்ற பெயரில் செல்லாக்காசுகள் புதிதாக கோஷம் எழுப்புவதாக ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். சிலர் கூலிப்படையாக செயல்பட்டு அதிமுக விலாசத்தை சிதைத்து விடலாம் என்று முயற்சி செய்கின்றனர். EPS-க்கு பலவீனத்தை ஏற்படுத்த நினைக்கும் செல்லாக்காசுகளின் திட்டம் ஒருகாலத்திலும் நடக்காது என்றும், சிலர் பதவி சுகம், அதிகாரத்தை பெற பேசுவதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
News September 16, 2025
மோடிக்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய மெஸ்ஸி

நாளை 75வது பிறந்தநாள் கொண்டாடும் PM மோடிக்கு கால்பந்து வீரர் மெஸ்ஸி பரிசு அனுப்பியுள்ளார். 2022-ம் ஆண்டு நடந்த கால்பந்து உலக கோப்பையை அர்ஜென்டினா வென்ற நிலையில், அந்த தொடரில் தான் பயன்படுத்திய ஜெர்ஸியில் கையெழுத்திட்டு, அதை மோடிக்கு அவர் பரிசாக அனுப்பி வாழ்த்து கூறியுள்ளார். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா வரும் மெஸ்ஸி, PM மோடியை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.