News October 24, 2025
BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மளமளவென சரிந்துள்ளது. காலையில் ₹320 அதிகரித்த நிலையில், மாலையில் ₹1,120 குறைந்துள்ளது. சென்னையில் தற்போது 22 காரட் தங்கம் 1 கிராம் ₹11,400-க்கும், 1 சவரன் ₹91,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ₹6,400 குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 24, 2025
சுய பராமரிப்பு டிப்ஸ்

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க உடல்நலம் மற்றும் மனநலம் இரண்டும் மிகவும் அவசியம். இதற்கு, ஏராளமான சுய பராமரிப்பு பழக்கங்கள் உள்ளன. சிறிய பயிற்சி கூட தினசரி செய்தால், பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அவை என்ன பயிற்சிகள் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்கள் செய்ய விரும்பும் பயிற்சி எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 24, 2025
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுதா? இதோ Solution

முடி கொட்டுது என்பதற்காகவே ஹெல்மெட் அணியாமல் பலர் பைக் ஓட்டுறாங்க. ஆனால் இவ்வளவு ரிஸ்க் எடுத்து உயிரை பணயம் வைத்து முடியை காப்பாற்றுவதால் என்ன பயன்? ஹெல்மெட் அணிந்தாலும் முடி கொட்டாமல் இருக்க சில Tips இருக்கு. ➤ஹெல்மெட்டின் உள்பகுதியை சுத்தம் செய்யுங்கள் ➤காட்டன் துணியை போட்ட பிறகு ஹெல்மெட்டை அணியுங்கள் ➤காற்றோட்டமான ஹெல்மெட்டை தேர்ந்தெடுங்கள் ➤ ஈரமான முடியில் ஹெல்மெட் அணிய வேண்டாம். SHARE.
News October 24, 2025
யார் வாக்குகளை பிரிக்கிறார் பிரசாந்த் கிஷோர்?

பிஹாரின் அடுத்த CM யார் என்பதை பிரசாந்த் கிஷோர் பெறும் வாக்குகள் தீர்மானிக்க உள்ளன. சமீபத்திய சர்வேயின் படி, 57% இளைஞர்கள் நிதிஷ் ஆட்சி மீது அதிருப்தியில் உள்ளனர். PK இல்லாவிட்டால் இந்த வாக்குகள் பெரும்பாலும் தேஜஸ்விக்கே செல்லும். ஜெகநாத் மிஸ்ராவுக்கு பிறகு 35 ஆண்டுகளாக உயர்சாதி CM இல்லாத விரக்தியில் இருக்கும் Brahmins & Upper castes, PK பக்கம் திரும்பினால் அது NDA வெற்றியை பாதிக்கும்.


