News May 7, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹1,640 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 1) சவரனுக்கு ₹1,640 குறைந்தது. இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹8,775-க்கும், சவரன் ₹70,200-க்கும் விற்பனையாகிறது. மாதத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலை சரிவைக் கண்டுள்ளது நகைப் பிரியர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. அ<<16272658>>ட்சய திருதியை<<>> நாளில் சென்னையில் தங்கம் விற்பனை சரிந்ததே, இன்றைய விலை குறைவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?
Similar News
News August 24, 2025
நேற்று ஆதரவு.. இன்று விஜய்க்கு எதிர்ப்பு.. என்ன நடந்தது?

நேற்று வரை விஜய்யை எங்க வீட்டு பிள்ளை; எங்கள் தம்பி என்று அழைத்து வந்த பிரேமலதா, இன்று விமர்சிக்க தொடங்கி இருக்கிறார். வாக்கை பிரிப்பதற்காக விஜயகாந்த் பெயரை விஜய் பயன்படுத்தினாரா என கேள்வி எழுந்தது. இதுகுறித்து பிரேமலதா, எங்களுக்கென தனி இயக்கம் இருக்கிறது. எங்கள் கட்சியில் வாரிசுகள் இருக்கிறார்கள், கேப்டன் பெயரை வேறொருவர் பயன்படுத்துவதை நாங்கள் ஏற்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
News August 24, 2025
கணிதத்தில் பஞ்சாங்கத்தை சேர்க்க பரிந்துரை

இளநிலை பட்டப்படிப்புகளின் கணித பாடத்தில் பாரத அட்சர கணிதம் (இந்திய அல்ஜீப்ரா) மற்றும் பஞ்சாங்கம் ஆகியவை குறித்து கற்பிக்க UGC வரைவு பாடத் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சடங்குகள், திருவிழாக்களின்போது பஞ்சாங்கம் மூலம் எவ்வாறு நல்ல நேரம் கணிக்கப்படுகிறது பற்றியும் கற்பிக்க பரிந்துரைக்கப்படுகிறது. வான சாஸ்திரம், சூரிய சித்தாந்தம் ஆகியவையும் பாடத்திட்டத்தில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News August 24, 2025
உங்களுக்கு பிடித்த Evergreen படம் எது?

தமிழ் சினிமாக்கள் நமக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுப்பதாக சமீபத்தில் AR முருகதாஸ் தெரிவித்திருந்தார். இதனை பலரும் ஏற்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், கற்றல் மற்றும் பொழுதுபோக்குடன் எடுக்கப்பட்ட தமிழ் படங்கள் இன்றளவும் Evergreen ஆக ரசிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட படங்களின் லிஸ்ட் மேலே இருக்கிறது. இதுபோன்று உங்களை இன்றும் மகிழ்விக்கும் Evergreen படம் எது?