News May 7, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹1,640 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 1) சவரனுக்கு ₹1,640 குறைந்தது. இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹8,775-க்கும், சவரன் ₹70,200-க்கும் விற்பனையாகிறது. மாதத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலை சரிவைக் கண்டுள்ளது நகைப் பிரியர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. அ<<16272658>>ட்சய திருதியை<<>> நாளில் சென்னையில் தங்கம் விற்பனை சரிந்ததே, இன்றைய விலை குறைவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?
Similar News
News January 10, 2026
கோவை மக்களே: இனி அலைச்சல் வேண்டாம்!

கோவை மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்.
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) கோவை மாவட்ட அறிவிப்புகளை அறிய: shttps://coimbatore.nic.in/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News January 10, 2026
முதல் நாளிலேயே ₹100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை

மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில், ‘ராஜாசாப்’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. வெளியான முதல் நாளிலேயே இப்படம் ₹112 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தபோதும், தியேட்டரை நோக்கி ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக படையெடுக்கின்றனர். இதனால், பொங்கல் (சங்கராந்தி) விடுமுறையில் இப்படம் மேலும் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 10, 2026
அமைச்சரவையில் இடம் கேட்டு பாஜக அழுத்தமா? நயினார்

ஆட்சியில் பங்கு வேண்டும் என பாஜக, இதுவரை அதிமுகவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அத்துடன் கூட்டணியில் எத்தனை இடங்களில் போட்டி என்பதை உறுதி செய்த பின்னர் அறிவிப்போம் என்ற அவர், இரட்டை இலக்கத்தில் BJP MLA-க்கள் பேரவைக்கு செல்வது உறுதி என்றார். முன்னதாக, ஆட்சியில் பங்கு, 3 அமைச்சர் பதவிகளை கேட்டு EPS-க்கு பாஜக அழுத்தம் கொடுப்பதாக பேச்சு எழுந்தது.


