News October 28, 2025
BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

தங்கம் விலை இன்று(அக்.28) சவரனுக்கு ₹1,200 குறைந்துள்ளது. 22 கேரட் 1 கிராம் ₹11,300-க்கும், சவரன் ₹90,400-க்கும் விற்பனையாகிறது. <<18124580>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை மளமளவென சரிந்து வரும் நிலையில், நம்மூரிலும் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. இது வரும் சில நாள்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News October 28, 2025
திமுக ஆட்சி வீட்டுக்கு செல்வது உறுதி: விஜய்

விவசாயிகளின் நெல் மூட்டைகளை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் அவற்றை மழையில் நனையவிட்டு வீணாக்கிய திமுக அரசு வீட்டுக்கு செல்வது உறுதி என விஜய் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கரூரில் 41 பேர் பலியான சம்பவத்திற்கு பிறகு அரசியல் ரீதியாக எவ்வித அறிக்கை, அறிவிப்புகளையும் வெளியிடாமல் இருந்த அவர், நேற்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய நிலையில், மீண்டும் அரசியல் பணிகளை தொடங்கியுள்ளார்.
News October 28, 2025
மருத்துவ சின்னங்களில் ஏன் பாம்பு உள்ளது தெரியுமா?

உலகளவில் மருத்துவ சின்னங்களில் பாம்பு இடம்பெற்றிருக்கும். WHO-வின் Logo-விலும் பாம்பு இருப்பதை நம்மால், பார்க்க முடியும். ஆனால், பாம்புக்கும், மருத்துவத்துக்கும் என்ன சம்பந்தம் என தெரியுமா? கிரேக்க புராணங்களின் படி, மருத்துவ தெய்வமான அஸ்கிளேபியஸ்(Asclepius) கையில் பாம்பு சுற்றிய தடியை (Rod of Asclepius) வைத்திருந்தார். அதன் வெளிப்பாடாகவே மருத்துவ சின்னங்களில் பாம்பு இடம்பெறுவதாக கூறப்படுகிறது.
News October 28, 2025
BREAKING: தவெகவில் அதிரடி மாற்றம்.. விஜய் எடுத்த முடிவு

தவெகவில் அமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்களை செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார். தான் செய்ய உள்ள மாற்றங்களுக்கு உடனடியாக நிர்வாகிகளிடம் ஒப்புதல் பெற அடுத்த வாரம் அவசர பொதுக்குழுவை கூட்டுகிறார். இது, சென்னை (அ) மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கரூரில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாகவும், கட்சியின் அடுத்தகட்ட பணிகள் குறித்தும் இக்கூட்டத்தில் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.


