News September 4, 2025
BREAKING: தங்கம் விலை குறைந்தது

கடந்த 9 நாளாக தொடர்ந்து அதிகரித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, 10-வது நாளான இன்று சற்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 குறைந்து ₹78,360-க்கும், கிராமுக்கு ₹10 குறைந்து ₹9,795-க்கும் விற்பனையாகிறது. கடந்த 9 நாள்களில் தங்கம் விலை ₹4,000 அதிகரித்த நிலையில், இன்று வெறும் ₹80 மட்டுமே குறைந்துள்ளது
Similar News
News March 7, 2026
தென்காசியில் உதயநிதி ஸ்டாலின் காரை மறித்த பெண்கள்

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் நேற்று மதியம் தனியார் அரங்கத்தில் திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு விட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை நோக்கி புறப்பட்டார். அப்போது, அவரது காரை மறித்த மகளிர் அவருடன் செல்பி எடுக்க கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து மகளிர் அலைபேசியை வாங்கிய துணை முதல்வர் செல்ஃபி எடுத்த பின் அவரிடம் மீண்டும் அலைபேசியை வழங்கினார்.
News March 7, 2026
அதிமுக கூட்டணியில் இணைந்தார்

திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 நாளாக புதிய தமிழகம், தேசிய திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுகவினர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதில், தேசிய திராவிட கழக பொதுச்செயலாளர் பூட்டுதாக்கு நித்தியா, 2026 தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பதாக அறிவித்துள்ளார். இன்று அல்லது நாளை EPS-ஐ நேரில் சந்தித்து, ஆதரவு கடிதத்தை நித்தியா வழங்கவுள்ளார்.
News March 7, 2026
காங்கிரஸ் வேட்பாளர்கள்.. CM ஸ்டாலின் கொடுத்த அட்வைஸ்!

நீண்ட இழுபறிக்கு பிறகு திமுக – காங்கிரஸ் கூட்டணி இறுதியாகியுள்ளது. இந்நிலையில், 28 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து காங்கிரஸ் தலைவர்களிடம் CM ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது என்பதால் தொகுதியில் செல்வாக்கு, செலவு செய்யத் தயாராக இருப்பவரை களமிறக்க வேண்டும் என காங்., மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம் வலியுறுத்தியதாக தகவல் கசிந்துள்ளது.


