News January 10, 2025
BREAKING: தங்கம் விலை தொடர்ந்து உயர்வு

சென்னையில் 1 கிராம் தங்கம் நேற்று ரூ.7,260க்கு விற்கப்பட்டது. 1 சவரன் தங்கம் ரூ.58,080க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், 1 கிராம் தங்கம் விலை இன்று ரூ.25 உயர்ந்து ரூ.7,285க்கு விற்கப்படுகிறது. அதேபோல், 1 சவரன் தங்கம் ரூ.200 அதிகரித்து ரூ.58,280க்கு விற்கப்படுகிறது. 1 கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து, ரூ.101ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.1,000 அதிகரித்து, ரூ.1,01,000ஆகவும் விற்கப்படுகிறது.
Similar News
News January 17, 2026
பாம்பை வைத்து பொங்கல்.. தமிழ்நாட்டில் விநோதம்

காஞ்சிபுரம், சாத்தணஞ்சேரியில் இருளர் மக்கள் நல்ல பாம்பை பிடித்து பொங்கல் வைக்கும் பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர். பொங்கலுக்கு 4 நாள்களுக்கு முன்பே பாம்பை பிடித்து, பானையில் அடைத்து வைத்து அதற்கு பூஜை செய்கின்றனர். பின்னர் காணும் பொங்கல் அன்று கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு பாம்பை எடுத்துச் சென்று, கற்பூர ஆரத்தி காட்டி வீட்டு வாசலில் படம் எடுக்கச் செய்யும் விநோத வழிபாடு நடந்து வருகிறது.
News January 17, 2026
வங்கதேசத்திடம் தடுமாறும் இந்திய அணி

U19 உலகக்கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 71/3 ரன்களில் தடுமாறி வருகிறது. கேப்டன் ஆயுஷ் மாத்ரே(6) , வேதாந்த் திரிவேதி(0), விஹான் மல்கோத்ரா(7) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தனர். ஆனால் இளம் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி 30 பந்துகளில் அரைசதம் அடித்து அணிக்கு பெரும் நம்பிக்கை அளித்து வருகிறார்.
News January 17, 2026
மத்திய அரசுக்கு இறுதி வாய்ப்பு: SC அதிரடி!

அனைவருக்கும் கல்வி திட்டத்தில் TN-க்கு வழங்க வேண்டிய ₹3,500 கோடி நிதியை விடுவிக்க கோரி, TN அரசு SC-ல் வழக்கு தொடர்ந்திருந்தது. இதன் வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசின் நடவடிக்கையால் 45 லட்சம் மாணவர்கள், 2 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக TN அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கில் 4 வாரத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய இறுதி வாய்ப்பு வழங்கி SC உத்தரவிட்டுள்ளது.


