News October 7, 2025

BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்

image

ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹600 உயர்ந்து ₹89,600-க்கும், ஒரு கிராம் தங்கம் விலை ₹75 உயர்ந்து ₹11,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ₹90 ஆயிரத்தை நெருங்கியதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News October 7, 2025

FORMULA E காரில் சீறிப்பாய்ந்த அஜித்தின் போட்டோஸ்

image

ஸ்பெயினில் மஹிந்திராவின் ‘FORMULA E GEN 2’ காரை அஜித் டெஸ்ட் டிரைவ் செய்துள்ளார். இந்த வாய்ப்பை கொடுத்த ஆனந்த் மஹிந்திராவுக்கும், FORUMULA கார் குறித்து விளக்கம் அளித்த ரேஸர் நிக் டி வ்ரீஸூக்கும் அஜித் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான போட்டோஸ் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் கடந்த ஓராண்டாக கார் ரேஸிங்கில் தீவிரமாக உள்ளார்.

News October 7, 2025

30 வயதை கடந்தவரா? இந்த Medical டெஸ்ட்கள் பண்ணுங்க!

image

உடலுக்கு ஏதாவது பிரச்னை வரும்முன் காப்பதே சிறந்தது. அதற்கு, இந்த டெஸ்ட்களை 30 வயதை கடந்த ஆண் & பெண் செய்ய வேண்டியது அவசியம் என்கின்றனர் டாக்டர்கள்: ✦CBC ✦Lipid டெஸ்ட் ✦ECG டெஸ்ட் ✦கல்லீரல்- சிறுநீரக செயல்பாடு டெஸ்ட் ✦தைராய்டு ✦வைட்டமின் D டெஸ்ட். ஒன்று அல்லது இரு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது இந்த டெஸ்ட்களை செய்து கொண்டு உடல்நலம் குறித்து அறிவது அவசியம். SHARE IT.

News October 7, 2025

நயினார் பரப்புரைக்கு அனுமதி

image

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பரப்புரை பயணத்திற்கு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. மக்களுக்கு குடிநீர் கொடுக்க வேண்டும், கர்ப்பிணிகள், குழந்தைகள் கூட்டத்தில் பங்கேற்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில், அக்.12-ம் மதுரையில் தொடங்கும் இந்த பரப்புரையில் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா பங்கேற்கிறார்.

error: Content is protected !!