News January 1, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் 1 கிராம் ரூ.7,110ஆகவும், 1 சவரன் தங்கம் ரூ.56,880ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று 1 கிராம் தங்கம் ரூ.40 உயர்ந்து ரூ.7,150 ஆகவும், 1 சவரன் தங்கம் ரூ.320 அதிகரித்து ரூ.57,200ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. 1 கிராம் வெள்ளி ரூ.98ஆகவும், 1 கிலோ ரூ.98,000ஆகவும் விற்பனையாகிறது.
Similar News
News September 11, 2025
ஆக்ஷன் ஹீரோ ஆகிட்டீங்க SK: ரஜினி புகழாரம்

தனது ரோல் மாடலான ரஜினிகாந்திடம் இருந்து ஒரு அளப்பரிய அன்பு கொண்ட பரிசை சிவகார்த்திகேயன் பெற்றுள்ளார். ‘மதராஸி’ படம் பார்த்த பின்பு SK உடன் தொலைபேசியில் பேசிய ரஜினி, ‘My God’ ஆக்ஷனில் கலக்கியிருப்பதாக பாராட்டியுள்ளார். முக்கியமாக, ‘ஆக்ஷன் ஹீரோ ஆகிட்டீங்க SK’ என்று ரஜினி தெரிவித்ததாக நெகிழ்ந்துள்ளார். தனது டிரேட்மார்க் சிரிப்பால் வாழ்த்தியதாகவும் SK, தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
News September 11, 2025
CM ஸ்டாலின் வீட்டில் துயரம்.. தலைவர்கள் நேரில் அஞ்சலி

CM ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் தந்தை வேதமூர்த்தி(80) உடல்நலக்குறைவால் காலமானார். சென்னை OMR-ல் உள்ள ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நள்ளிரவில் அவரது உயிர் பிரிந்தது. வேதமூர்த்தியின் உடல் கொட்டிவாக்கம் AGS காலனியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொழிலதிபர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
News September 11, 2025
SPORTS ROUNDUP: Boxing-ல் இந்திய வீராங்கனை அசத்தல்!

*உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: மகளிர் 80 கிலோ பிரிவில் நுபுர் ஷியாரன்(IND) 4-1 என சோடிம்போவாவை (உஸ்பெகிஸ்தான்) தோற்கடித்து Semi-க்கு முன்னேறினார்.
*உலக கோப்பை கால்பந்து: தகுதிச்சுற்றில் ஈகுவடாரிடம் 1- 0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா தோல்வி. இப்போட்டியில் மெஸ்ஸி விளையாடவில்லை.
*Pro kabbadi: யு மும்பா அணியை 45-37 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தெலுகு டைட்டன்ஸ்.