News September 22, 2025
BREAKING: தங்கம் விலை புதிய Record

ஆபரணத் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராம் ₹70 உயர்ந்து ₹10,360-க்கும், சவரன் ₹560 உயர்ந்து ₹82,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ₹83 ஆயிரத்தை நெருங்குவது இதுவே முதல்முறை. இதனால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News September 22, 2025
நடிகை ராதிகா வீட்டில் துயரம்.. CM ஸ்டாலின் இரங்கல்

மறைந்த நடிகர் எம்.ஆர். ராதாவின் மனைவியும், நடிகை ராதிகாவின் தாயாருமான கீதா ராதாவின் மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது பிரிவால் வாடும் சகோதரி ராதிகா சரத்குமார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நயினார் நாகேந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரும் கீதா ராதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். RIP
News September 22, 2025
போன் Back case-ல பணம் வைக்குறீங்களா? ஜாக்கிரதை!

போன் Back case-ல் ரூபாய் நோட்டுகளை (அ) கிரெடிட் கார்டுகளை வைப்பவரா நீங்கள்? இதனால் உங்கள் போன் வெடிக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இப்படி செய்வதால் போனில் உருவாகும் வெப்பம் வெளியாகாமல் தடைபடுகிறது. இதனால் நாளடைவில் பேட்டரிகள் வீங்கும், சில சமயங்களில் அது வெடிக்கலாம் என்கின்றனர். மேலும், போனில் உருவாகும் வெப்பம் ATM கார்டுகளை சேதப்படுத்துகின்றன. எனவே இப்படி பண்ணாதீங்க. SHARE.
News September 22, 2025
அதிமுக வெற்றிக்கு அணில் போல உதவுங்கள்

MGR-க்கு கூடிய கூட்டம் யாருக்கும் கூடாது என்றும் எந்த கூட்டத்தையும் கண்டு அதிமுகவினர் பயப்பட வேண்டாம் எனவும் செல்லூர் ராஜு கூறியுள்ளார். மதுரை அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், ராமர் பாலத்தை கட்ட உதவியதாக கூறப்படும் அணில் போல, 2026-ல் அதிமுக ஆட்சியமைக்க இளைஞர்கள் உதவ வேண்டும் என்றார். அப்போது, நீங்கள் வேற அணிலை நினைத்துவிடாதீர்கள் என கூறி விஜய்யை மறைமுகமாக சீண்டினார்.