News October 31, 2025
BREAKING: தங்கம் விலை.. மகிழ்ச்சி செய்தி

கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் என மாறிக்கொண்டே இருந்தது. சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை $3,949-லிருந்து $4,018.9-ஆக உயர்ந்தது. இதன் எதிரொலியாக இன்று நம்மூரிலும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நீண்ட நாள்களுக்கு பிறகு விலையில் எந்தவித மாற்றமின்றி ஒரு கிராம் தங்கம் ₹11,300-க்கும், சவரன் 90,400-க்கும் விற்பனையாகிறது.
Similar News
News October 31, 2025
இது வேற மாதிரி போலீஸ்

பிரேசிலின் வடகிழக்கே அமைந்துள்ள மராஜோ தீவில் உள்ள சோர் நகரில், காவல்துறை அதிகாரிகள் ரோந்துப் பணிகளுக்கு, கார்களோ அல்லது குதிரைகளோ பயன்படுத்துவதில்லை. மாறாக எருமைகளில் சவாரி செய்கிறார்கள். வாகனங்கள் ஈரநிலங்கள் வழியாக எளிதாகச் செல்ல முடியாததால், எருமைகளை பயன்படுத்துகின்றனர். ரோந்து பணிக்கு, எருமைகளைப் பயன்படுத்தும் உலகின் ஒரே போலீஸ் படை இவர்கள்தான். “எருமை ரோந்து” பற்றி உங்கள் கருத்து என்ன?
News October 31, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

மொன்தா புயல் எதிரொலியாக சென்னை, திருவள்ளூரில் கடந்த 28-ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை ஈடுசெய்யும் விதமாக நாளை(சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னையில் பள்ளிகள் இயங்காது என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், திருவள்ளூரில் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியானது. அதில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியாகலாம்.
News October 31, 2025
PM பேசியது அண்ட புளுகு, ஆகாச புளுகு: திருமா

ஒரு பிரதமர் தேர்தல் ஆதாயத்திற்காக, எப்படி இப்படியான ஒரு அண்ட புளுகை, ஆகாச புளுகை பேசுகிறார் என்று தெரியவில்லை என திருமாவளவன் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் பிஹார் மக்களை அச்சுறுத்துவதாக பேசிய மோடிக்கு கண்டனம் தெரிவித்த அவர், இது ஆபத்தான அணுகுமுறை என்று குறிப்பிட்டுள்ளார். பிஹாரில் வாக்குகளை பெறுவதற்காக பாஜக இந்த அரசியலை செய்வதாக அவர் சாடியுள்ளார்.


