News April 28, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்தது

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.520 குறைந்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் ரூ.9,005ஆகவும், 1 சவரன் ரூ.72,040ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று 1 கிராமுக்கு ரூ.65 குறைந்து, ரூ.8,940ஆகவும், 1 சவரன் ரூ.520 சரிந்து, ரூ.71,520ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.111ஆகவும், கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1.11 லட்சமாகவும் விற்கப்படுகிறது. SHARE IT.
Similar News
News October 21, 2025
திறனற்ற திமுக அரசால் மக்கள் அவதி: எல்.முருகன்

திமுக அரசின் நிர்வாக திறன் இன்மையால் மக்கள் அவதிப்பட்டு வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். விலைவாசி உயர்வு மக்களை பெருமளவு பாதித்துள்ளதாகவும், மறுபுறம் மத்திய அரசு மக்களின் நலனுக்காக GST வரிக்குறைப்பை கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் மக்கள் திமுகவை தூக்கி எறிய தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
News October 21, 2025
கற்றாழையை உணவில் சேர்த்தல் இத்தனை நன்மைகள்

ஒரு குளிர்ந்த கற்றாழை ஜூஸ் உங்கள் செரிமானத்தை தூண்டி, தோலில் ஒளிரும் அழகை தரும். மேலும் உணவின் ஒரு பாகமாக இதை சேர்க்கும் போது பல நன்மைகள் கிடைக்கும்.*கற்றாழை ஜெல்லை உணவில் சேர்த்தால், குடல் சுத்தமாகி செரிமானம் சீராகும். குடல் இயக்கத்தையும் இது தூண்டும். *கற்றாழை உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. *கற்றாழை இயற்கையான டிடாக்ஸாக செயல்பட்டு, கல்லீரலை சுத்தமாக வைத்திருக்கிறது.
News October 21, 2025
புதுவீட்டில் தீபாவளியை கொண்டாடிய சமந்தா

கியூட் ரியாக்ஷன்களில் நம்மை கொள்ளைகொள்ளும் சமந்தா, தீபாவளியை கோலகலமாக கொண்டாடியுள்ளார். மும்பையில் புதிதாக அபார்ட்மெண்ட் வாங்கி செட்டிலான அவர், அங்கு தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். தீபாவளி கொண்டாட்டத்தின் போது எடுத்த போட்டோஸ் உடன், தனது வீட்டின் புகைப்படங்களை சமந்தா இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். மேலே உள்ள அந்த போட்டோஸை SWIPE செய்து பாருங்கள்.