News December 27, 2024
BREAKING: தங்கம் விலை ரூ.57 ஆயிரத்தை தாண்டியது

1 சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.57 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.7,125க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.57 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று 1 கிராம் தங்கம் விலை ரூ.25 அதிகரித்து ரூ.5,150 ஆக விற்பனையாகிறது. அதேபோல் 1 சவரன் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.57,200 ஆக விற்கப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலையிலேயே இன்றும் விற்கப்படுகிறது.
Similar News
News August 15, 2025
ஆகஸ்ட் 15 இந்தியாவுக்கு மட்டும் சுதந்திர தினம் அல்ல..

*Liechtenstein 1940-ல் ஜெர்மன் குடியரசில் இருந்து பிரிந்ததை National day-வாக கொண்டாடுகிறது.
*வட மற்றும் தென் கொரியா நாடுகள், 1945-ல் ஜப்பானில் இருந்து விடுதலை பெற்றதை, Liberation day-வாக கொண்டாடுகின்றன.
*1960-ல் பிரான்ஸிடம் இருந்து சுதந்திரம் பெற்றதை காங்கோ குடியரசு National day-வாக கொண்டாடுகிறது.
*பஹ்ரைன் 1971-ல் பிரிட்டிஷிடம் இருந்து சுதந்திரம் தினமாக கொண்டாடுகிறது.
News August 15, 2025
விடுதலை போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் அதிகரிப்பு: CM

விடுதலை போராட்ட வீரர்களின் குடும்பத்திற்கான மாதாந்திர ஓய்வூதிய உதவித்தொகை ₹22 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேபோல் 2-ம் உலகப்போரில் பங்கேற்றவர்களுக்கான ஓய்வூதியம் ₹15,000 ஆக உயர்த்தப்படுவதாகவும் கூறியுள்ளார். தியாகிகள், போராளிகளுக்கு மணிமண்டபம், சிலைகள் பெரும்பாலும் திமுக ஆட்சியிலேயே அமைக்கப்பட்டதாகவும் சுதந்திர தின உரையில் CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
News August 15, 2025
11 நிமிடத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை.. செயலியால் அசத்தல்

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொள்ள, பிரத்யேக செயலி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் 11 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதை உறுதி செய்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. அவசரம் 108 செயலியில் உங்களின் இருப்பிடத்தை உறுதிபடுத்தி தகவல் கொடுத்தால், விரைவாக சேவை கிடைக்குமாம். அவசர தேவைக்கு பயன்படுத்திகோங்க..