News September 23, 2025

BREAKING: ₹85,000-ஐ தாண்டிய தங்கம் விலை

image

ஆபரணத் தங்கத்தின் விலை, வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. காலையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராம் ₹70 உயர்ந்து ₹10,500-க்கும், சவரன் ₹560 உயர்ந்து ₹84,000-க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் மீண்டும் சவரனுக்கு ₹1,120 உயர்ந்து ₹85,120-க்கு விற்பனையாகிறது. இதனால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News September 23, 2025

Introvert தெரியும், Extrovert தெரியும்.. Otrovert தெரியுமா?

image

பொதுவாக மக்களை Introvert, Extrovert என்று வகைப்படுத்துவார்கள். தற்போது புது வரவாக ‘Otrovert’ என்ற வகையினரை உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்கள் மக்கள் அதிகமாக கூடும் பார்ட்டிகளுக்கு செல்ல விரும்பினாலும், அங்கு ஒருசிலரிடம் மட்டுமே சகஜமாக இருப்பார்களாம். ஆனால், பழகுபவர்களுடன் நல்ல பிணைப்பும், தன்னிச்சையாக சிந்திக்கும் தன்மையும் கொண்டவர்களாக இருப்பார்களாம். இந்த மூன்றில் நீங்க எந்த வகை?

News September 23, 2025

மகளிர் உரிமைத் தொகை.. உத்தரவு போட்ட ஸ்டாலின்

image

திமுக MPக்கள் தங்கள் தொகுதியில் வாரத்தில் 4 நாள்களுக்கு தங்கியிருந்து பணியாற்ற ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத்தொகை ₹1000 கிடைப்பதை உறுதி செய்யவும், தொகுதியில் மேற்கொண்ட மக்கள் பணி குறித்து 15 நாள்களுக்கு ஒருமுறை அறிக்கை அளிக்கவும் எம்பிக்களுக்கு உத்தரவிட்ட ஸ்டாலின், தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்களுடன் ஒருங்கிணைந்து கட்சிப் பணியாற்றவும் அறிவுறுத்தினார்.

News September 23, 2025

இந்தியாவை வெல்ல இதுவே ஒரே வழி: இம்ரான் கான்

image

பாக்., ராணுவ தளபதி அசிம் முனிரும், PCB தலைவர் மொஹ்சின் நக்வியும் ஓபனிங் இறங்கினால் மட்டுமே, இந்திய அணியை வெல்ல முடியும் என அந்நாட்டின் EX PM இம்ரான் கான் கலாய்த்துள்ளார். மேலும், EX தலைமை நீதிபதி மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் அம்பயர்களாக செயல்பட வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு எதிரான போட்டிகளில் அடுத்தடுத்து பாக்., தோல்வியை சந்தித்து வரும் நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!