News October 24, 2025
BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

கடந்த 2 நாளாக தங்கம் விலை குறைந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ₹40 உயர்ந்து ₹11,540-க்கும் சவரனுக்கு ₹320 உயர்ந்து ₹ 92,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மீண்டும் தங்கம் விலை உயர்ந்ததால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Similar News
News October 24, 2025
தங்கம் விலை ₹2 லட்சமாக உயரும்

சர்வதேச அளவில் தங்கம் ஒரு அவுன்ஸ் $4100-க்கு வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை சிறிதளவு வீழ்ச்சி கண்டிருந்தாலும், இனி உயரவே வாய்ப்புள்ளது. 2028-ல் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் $8000 வரை உயரும் என JP Morgan நிறுவனம் கணித்துள்ளது. இதன் அடிப்படையில் இந்தியாவில் ஒரு சவரன் தங்கம் ₹2 லட்சம் வரை உயரும் என்று கூறப்படுகிறது.
News October 24, 2025
சாவின் விளிம்புக்கு சென்றேன்: திலக் வர்மா

2022-ல் சாவின் விளிம்புக்கு சென்றதாக திலக் வர்மா கூறியுள்ளார். ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிர உடற்பயிற்சி செய்ததால், ‘Rhabdomyolysis’ என்னும் தசை சிதைவு நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். வங்கதேச A அணியுடனான போட்டியின் போது, கை விரல்கள் இயங்காமல் போக, ஹாஸ்பிடலுக்கு விரைந்துள்ளார். அப்போது, சற்றே தாமதித்திருந்தாலும் உயிருக்கே ஆபத்தாகி இருக்கும் என டாக்டர் தெரிவித்ததாக அவர் கூறினார்.
News October 24, 2025
”திமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவு..”

தன்னை அவமரியாதையாக நடத்தினாலோ, கேட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளை தர மறுத்தாலோ திமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுப்பேன் என தவாக வேல்முருகன் கூறியுள்ளார். 2021 தேர்தல் முடிந்ததில் இருந்தே திமுகவுக்கும், வேல்முருகனுக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில், இவர் வைக்கும் கோரிக்கைகளை திமுக ஏற்குமா, கூட்டணியில் தவாக நீடிக்குமா என மீண்டும் சலசலப்பு கிளம்பியுள்ளது.


