News February 12, 2025
BREAKING: ஆபரணத் தங்கத்தின் விலை ₹960 குறைவு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739333215091_55-normal-WIFI.webp)
கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹960 குறைந்துள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹120 குறைந்து ₹7,940க்கும், சவரனுக்கு ₹960 குறைந்து ₹63,520க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ₹107க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Similar News
News February 12, 2025
வெறும் 1 ரன்னில் ரோகித் அவுட்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739348593418_55-normal-WIFI.webp)
ENGக்கு எதிரான3rd ODIயில் பேட்டிங் செய்து வரும் இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக மாறியுள்ளது. ஆம்! மார்க் வுட் வீசிய 2வது ஓவரின் முதல் பந்திலேயே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் ரோகித் வெறும் 1 ரன்னுக்கு அவுட் ஆகி நடையை கட்டினார். இப்போட்டியில் 13 ரன்கள் எடுத்து ODIயில் 11,000 ரன்களை கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது விக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
News February 12, 2025
G Pay, PhonePeல் அடிக்கடி பேலன்ஸ் பாக்குறீங்களா?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739346271342_1231-normal-WIFI.webp)
‘Jumped’ என்ற UPI மோசடி பரவுகிறது. திடீரென அக்கவுண்டிற்கு ஒரு சிறிய தொகை டெபாசிட்டாகிறது. அது கூடவே ‘Collect money’ Request வருகிறது. குழப்பத்தில் என்ன இது என சரிபார்க்க, PIN நம்பரை போட்டால், அக்கவுண்டில் இருந்து பெரிய தொகையை நேக்காக திருடுகிறார்கள். இந்த மோசடிகள் அதிகரித்ததை அடுத்து, இது குறித்து நடவடிக்கைகளில் NPCI எடுத்துள்ளது. தெரியாத நம்பர்களில் இது போன்ற மெசேஜுக்கு பதிலளிக்க வேண்டாம்.
News February 12, 2025
இந்தியர்களை அடிமை போல் நடத்தும் டிரம்ப்: கார்கே
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739336564524_1173-normal-WIFI.webp)
பிரதமர் மோடியின் நண்பர் டொனால்ட் டிரம்ப், இந்தியர்களை அடிமைகள் போல் நடத்துவதாக காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார். அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்களை, பயணிகள் விமானத்தில் அனுப்பாமல், சரக்கு விமானத்தில் அனுப்புவது அதையே காட்டுவதாகவும், இவ்விவகாரம் குறித்து பிரதமர் மோடி அமெரிக்க அதிபரிடம் பேச வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.