News October 15, 2025
BREAKING: பேய் மழை வெளுத்து வாங்கும்

தமிழ்நாட்டில் இன்று முதல் தீபாவளி (அக்.20) வரை கனமழை பெய்யக்கூடும் என்று IMD அலர்ட் கொடுத்துள்ளது. இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் மிக கனமழையும், குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கலில் கனமழையும் பெய்யக்கூடும். அதேபோல் நாளை சென்னை, காஞ்சி உள்ளிட்ட 30 மாவட்டங்களுக்கு கனமழைக்கான அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 15, 2025
வதந்தி பரவியதால் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்: CM

கரூர் சம்பவத்துக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தது ஏன் என எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு சட்டப்பேரவையில் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அதில், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதாலேயே அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்ததாக CM பதிலளித்துள்ளார். MGR,ஜெயலலிதா ஆகியோர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அதிகாரிகள் தானே பேட்டி அளித்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.
News October 15, 2025
பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்: IMF கணிப்பு

ஐநா சபையின் நிதி பிரிவு அமைப்பாக செயல்பட்டு வரும் IMF, இந்தியாவின் நடப்பாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 6.6%-ஆக இருக்கும் என்று கணித்துள்ளது. இது ஏற்கெனவே கணிக்கப்பட்ட 6.4%-ல் இருந்து 0.2% அதிகமாகும். இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு உள்பட பல்வேறு சவால்கள் உள்ளபோதும், இந்திய பொருளாதாரம் வலிமையாக உள்ளதாக IMF தெரிவித்துள்ளது.
News October 15, 2025
கரூரில் பாதுகாப்பு குறைபாடா? CM பேரவையில் விளக்கம்

கரூர் துயரத்துக்கு காவல்துறையின் பாதுகாப்பு குறைபாடே காரணம் என சட்டப்பேரவையில் EPS குற்றம்சாட்டினர். இதற்கு பதில் அளித்து பேசிய, ஸ்டாலின் விஜய்யே காவல்துறைக்கு சல்யூட் என கூறிவிட்டுதான் தனது பேச்சை தொடங்கியதாக கூறியுள்ளார். விஜய்யே காவல்துறையை பாராட்டி இருக்கும்போது, பாதுகாப்பு குறைபாடு இருந்தது என்று EPS சொல்லவது எப்படி சரியாக இருக்கும் என CM கேள்வி எழுப்பியுள்ளார்.