News March 18, 2024
BREAKING : கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை

அதிமுகவின் கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் ஓபிஎஸ் இரட்டை இலை, சின்னத்தை பயன்படுத்தி வந்தார். இதற்கு எதிராக இபிஎஸ் தரப்பு தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Similar News
News August 7, 2025
‘அம்மா… நான் போகிறேன்’

கந்துவட்டி கொடுமைகள் இன்றும் குறைந்தபாடில்லை. ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் வசித்துவந்த ரவிக்குமார், வட்டிக்கு ₹50,000 கடன் கேட்டுள்ளார். அதற்கு ₹15,000-ஐ பிடித்துக்கொண்டு ₹35,000 கொடுத்துள்ளனர். இதற்கு ₹1.20 லட்சம் வரை வட்டி மட்டுமே கட்டிய நிலையில், கடன் தீராத விரக்தியில், ‘நான் போகிறேன் அம்மா’ என தாய்க்கும் மனைவிக்கும் கடிதம் எழுதிவைத்து, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். என்ன சொல்ல?
News August 7, 2025
திமுகவுக்கு தூதுவிடும் OPS தளபதிகள்?

வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் திமுகவில் சேரும் முடிவில் இருக்கிறார்களாம். டெல்டாவில் வைத்தியலிங்கம் ஆதரவாளர்களை இழுக்கும் அசைன்மென்டை EPS கொடுத்துள்ளாராம். அதிமுகவுக்கு திரும்பினாலும் பழைய ’கெத்து’ இருக்காது என்பதால் திமுகவுக்கு தூதுவிட்டுள்ளாராம் வைத்தி. சிட்டிங் தொகுதி ஆலங்குளத்தை கொடுத்தால் திமுகவில் சேர தயார் என மனோஜ் பாண்டியனும் டீல் பேசுவதாக கூறப்படுகிறது. தளபதிகளை தக்கவைப்பாரா OPS?
News August 7, 2025
இன்ஸ்டா கொண்டுவரும் அசத்தல் ‘Repost’ அப்டேட்!

இன்ஸ்டாவில் பார்த்து ரசித்த ரீல்களையும், போஸ்டுகளையும் Reshare செய்ய சுலபமான வழி வந்துவிட்டது. Public ரீல்களுக்கும், போஸ்டுகளுக்கும் கீழே உள்ள ‘Repost’ பட்டனை அழுத்தினால் போதும். ஆனால், இது Profile Grid-ல் தெரியாது. இதற்காக, தனியாக ஒரு தனி ‘Reposts tab’-ம் கொடுக்கப்படும். மேலும், இந்த ரீல்ஸ்களின் முழு Credit-ம் Original Content Creator-களுக்கு கொடுக்கப்படுவதையும் இன்ஸ்டாகிராம் உறுதி செய்கிறது.