News September 26, 2025

BREAKING: முதல் மாவட்டமாக விடுமுறை அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவில் இருந்து விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, முதல் மாவட்டமாக இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இன்னும் சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், அடுத்தடுத்து விடுமுறை அறிவிப்புகள் வரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News September 26, 2025

நீங்கள் உண்மை என நம்பிக்கொண்டிருக்கும் பொய்கள்

image

இந்த காலகட்டத்தில் சரியான உணவு பழக்கம் பற்றிய விழிப்புணர்வு வந்தாலும், கூடவே பொய்யான நம்பிக்கைகளும் மக்கள் மத்தியில் விதைக்கப்படுகின்றன. அவர்களும் இதனை அப்படியே நம்பி பின்பற்றுவதால் வேறு சில உடல்நல பிரச்னைகளுக்கும் ஆளாகின்றனர். அப்படி நீங்கள் உண்மை என நம்பியிருக்கும் பொய்யான தகவல்களை பற்றி மேலே உள்ள போட்டோக்களை SWIPE பண்ணி தெரிஞ்சுக்கோங்க. விழிப்புணர்வுக்காக எல்லாருக்கும் SHARE பண்ணுங்க.

News September 26, 2025

ஜெகனை சைக்கோ என கூறிய பாலய்யா

image

ஆந்திர முன்னாள் CM ஜெகன் மோகன் ரெட்டியை, ‘சைக்கோ’ என பாலகிருஷ்ணா MLA சட்டமன்றத்தில் விமர்சித்தது சர்ச்சையாகியுள்ளது. ஜெகன் CM-ஆக இருந்தபோது, தெலுங்கு சினிமா பிரபலங்களை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கொடுக்கவில்லை என்ற பிரச்னை பாஜக MLA-வால் முன்வைக்கப்பட்டது. இந்த விவாதத்தின்போது இவ்வாறு பேசிய பாலய்யா, அரசு திரைப்பட விழாவில் 9-வது இடத்தில் தனது பெயர் இடம் பெற்றதற்கும் எதிர்ப்பு தெரிவித்தார்.

News September 26, 2025

இறைச்சிக்கும், செருப்புக்கும் தடா போட்ட ரிஷப் ஷெட்டி

image

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘காந்தாரா: சாப்டர் 1’ படம் அக்.2-ல் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் கடவுள் தொடர்பான காட்சிகளை எடுக்கும்போது இறைச்சி சாப்பிடாமலும், செருப்பு அணியாமலும் இருந்ததாக ரிஷப் ஷெட்டி கூறியுள்ளார். அத்துடன், தெய்வ நம்பிக்கை தனக்கு அதிகமாக உள்ளதாகவும், இதை சொல்வதில் தவறில்லை என்றும் தெரிவித்தார். பிறரின் நம்பிக்கைகளுக்கு மதிப்பளிப்பதாகவும் கூறினார்.

error: Content is protected !!