News March 30, 2025
BREAKING: ஏப்ரல் 1 முதல் கட்டணக் குறைப்பு

பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைப்பு தொடர்பாக சற்றுமுன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ₹10 லட்சம் வரை வீடு, மனை, விளை நிலம் போன்ற அசையா சொத்துகள் பெண்கள் பெயரில் வாங்கினால் பதிவு கட்டணம் குறைக்கப்படும். இந்த கட்டணக் குறைப்பு நாளை மறுநாள் முதல் அமலுக்கு வருவதாகவும் அரசு அறிவித்துள்ளது.
Similar News
News March 20, 2026
போரால் அழிவு.. இழப்பீடு கேட்கும் ஈரான்

தங்களது நாட்டில் ஏற்பட்ட அனைத்து சேதங்களுக்கும் UAE-க்கும் பொறுப்பு உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் மீது தாக்குதல் நடத்த US படைகளுக்கு தனது நிலப்பரப்பை பயன்படுத்த UAE அனுமதித்ததாகவும் குற்றஞ்சாட்டி இருக்கிறது. எனவே, அந்நாடு உரிய இழப்பீட்டை வழங்கவேண்டும் என ஐநா பொதுச் செயலாளருக்கு கடிதம் மூலமாக ஈரான் வலியுறுத்தியுள்ளது.
News March 20, 2026
ராசி பலன்கள் (20.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News March 20, 2026
அன்புமணி, TTV அவசர டெல்லி பயணம்

NDA கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், டெல்லியில் அமித்ஷாவை EPS நேரில் சந்தித்துள்ளார். இந்நிலையில் கூட்டணி தலைவர்களான அன்புமணி, TTV தினகரன் ஆகியோரும் நாளை டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, தொகுதிப் பங்கீடு இறுதிசெய்யப்பட்டு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.


